டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளிநாட்டு பிசினஸ்மேன்கள், எஞ்சினியர்கள், மருத்துவர்களுக்கு விசா வழங்கப்படும்.. மத்திய அரசு அனுமதி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிற்குள் வெளிநாட்டினர்களை அனுமதிக்கும் வகையில் விசா வழங்கும் நடைமுறையில் நிறைய தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது லாக்டவுன் 5.0 தளர்வுகளுடன் அமலில் உள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் தற்போது லாக்டவுன் உள்ளது. அதேபோல் தளர்வுகள் மூன்று கட்டமாக அன்லாக் 1 என்ற திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.

Indian government gives nod for relaxation for Visa for foreigners

இதில் மூன்றாம் கட்ட தளர்வில் சர்வதேச விமான போக்குவரத்து அனுமதிக்கப்பட உள்ளது. ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதங்களில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவிற்கு வெளிநாட்டு மக்களை அனுமதிக்கும் வகையில் விசா வழங்கும் முறையில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வியாபார மற்றும் பணி நோக்கத்திற்காக வரும் நபர்களுக்கான விசா வழங்கும் பணிகள் அனுமதிக்கப்படும். ஆனால் விளையாட்டு வீரர்களுக்கான பி3 விசா அனுமதிக்கப்படாது.

வெளிநாட்டு மருத்துவ குழுக்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ துறை பணியாளர்கள், மருத்தவ துறை பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கு அனுமதி. ஆனால் இவர்கள் இந்தியாவை சேர்ந்த ஏதேனும் ஒரு மருத்துவ நிறுவனத்தின் அனுமதியின் பெயரில் மட்டுமே வர முடியும்.

இதுவரை இல்லாத அதிகரிப்பு.. தமிழகத்தில் ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட சென்னைஇதுவரை இல்லாத அதிகரிப்பு.. தமிழகத்தில் ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட சென்னை

இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் அழைப்பின் பெயரில் பணி செய்யும் நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.ஐடி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பனி புரியும் நபர்களுக்கு இதற்கான அனுமதி வழங்கப்படும்.

இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள், பிரச்சனைகளை சரி செய்வதற்கான பணியாளர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வரவழைக்க முடியும். இவர்கள் எல்லோரும் புதிதாக விசா பெற விண்ணப்பிக்க வேண்டும். அதே சமயம் நீண்ட கால விசா வைத்து இருக்கும் நபர்கள், அதை புதுப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

English summary
Indian government gives nod for relaxation for Visa for foreigners on Lockdown 5.0.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X