டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமருக்கு தைரியமின்மை.. சீனாவை எதிர்கொள்ள இந்திய அரசு பயப்படுகிறது.. ராகுல் காந்தி ட்வீட்

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவை எதிர்ப்பதற்கும் மோடி அரசு அஞ்சுவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Recommended Video

    சீனாவை எதிர்க்க இந்தியா அஞ்சுகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுத்தபோது நடைபெற்ற தாக்குதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

    Indian Government scare to face Chinese intentions in Ladakh: Rahul Gandhi

    இதன் பிறகு, 5 சுற்று பேச்சுவார்த்தைகள், ராணுவ தளபதிகள் மட்டத்தில் நடைபெற்ற போதிலும் சீன ராணுவம் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

    மத்திய அரசு, சீனா எந்த ஓர் இடத்தையும் ஆக்கிரமிக்கவில்லை என்று கூறினாலும், இந்திய ராணுவம் ரோந்து செல்வதற்குக் கூட சீன ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து அடாவடியில் ஈடுபட்டு வருகிறது என்கிறது பல்வேறு ஊடக செய்திகள்.

    இந்த நிலையில்தான் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய அரசு சீனாவின் லடாக் அத்துமீறலுக்கு எதிராக செயல்படுவதற்கு பயப்படுகிறது. தனது நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்கு சீனா முயற்சி செய்வது நன்கு தெரிகிறது. மீடியாக்களின் மௌனம் மற்றும் பிரதமரின் தனிப்பட்ட தைரியமின்மை, இந்தியாவுக்கு மிகப்பெரிய விலையை கொடுக்க போகிறது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு தமிழகம் வெற்றிநடை போடும் - முதல்வர் சுதந்திர தின வாழ்த்து கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு தமிழகம் வெற்றிநடை போடும் - முதல்வர் சுதந்திர தின வாழ்த்து

    சீன விவகாரத்தில் இந்தியா தைரியமாக எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை என்று ராகுல்காந்தி தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    GOI is scared to face up to Chinese intentions in Ladakh. Evidence on the ground indicates that China is preparing and positioning itself. PM’s personal lack of courage and the media’s silence will result in India paying a huge price, says Rahul Gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X