டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முயற்சி செய்தால் சமயத்துல முதுகு தாங்கும் இமயத்தையே.. சாதித்துக் காட்டிய இந்திய வீராங்கனை!

ஆபத்தான 7 மலைச் சிகரங்களை அடையும் முயற்சியில் சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை அபர்ணா.

Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் ஆபத்தான் ஏழு மலைச் சிகரங்களில் ஏறி இறங்கி புதிய சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனையான அபர்ணா குமார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அபர்ணா குமார்(45). இவர் தற்போது இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் டிஜஜியாக பணியாற்றி வருகிறார். மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான இவர், உலகில் ஆபத்தான் ஏழு மலைச் சிகரங்களில் ஏறுவதென முடிவு செய்தார். இதற்கென கடந்த 2014ம் ஆண்டு பிரத்யேகப் பயிற்சியையும் அவர் பெற்றார்.

indian ips officer aparna kumar scales highest peak in north america


அதன் தொடர்ச்சியாக ஆபத்து நிறைந்த பல மலைச் சிகரங்களில் அவர் ஏறினார். கடந்த ஜனவரி மாதம் அண்டார்டிக்காவின் தென்துருவத்தில் உள்ள மலைச் சிகரத்தை மைனஸ் 37 டிகிரி அளவிலான கடும்குளிரிலும் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தார்.

தற்போது, வட அமெரிக்காவில் 20 ஆயிரத்து 310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தெனாலி மலைச்சிகரத்தை அடைந்துள்ளார். இதன் மூலம் உலகின் ஆபத்தான ஏழு மலைச் சிகரங்களை ஏறி இறங்கி தனது சாதனையை நிறைவு செய்தார்.

indian ips officer aparna kumar scales highest peak in north america

இந்தச் சாதனை மூலம், அரசுப் பணியில் இருக்கும் ஐ.பி.எஸ்.அதிகாரி என்ற வகையில் முதன்முதலாக இந்த சாதனையை செய்தவர் என்ற பெருமை அபர்ணாவுக்கு கிடைத்துள்ளது.

திருமணமான பெண் அதிகாரியான அபர்ணாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Aparna Kumar scaled the Mount Denali in North America which has a summit elevation of 20,310 feet above sea level. The IPS officer has also completed her 7th summit in the
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X