சூப்பர் நியூஸ்.. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது..தமிழ்நாட்டில் இங்கெல்லாம் மழை கொட்டபோகுது
டெல்லி: இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை கேரளாவில் இன்று முதல் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பார்த்து.. கழண்டு விழுந்துட போகுது.. பதறிப் போன ஷிவானி ஃபேன்ஸ்!
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும்.

தென்மேற்கு பருவமழை
இந்த இரண்டு காலங்களிலும் பெரும்பாலும் நல்ல மழை பெய்யும். இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது. அதன்பிறகு ஜூன் 3-ம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் கணித்து இருந்தது. தென்மேற்கு மற்றும் வங்காள விரிகுடாவின் கிழக்குப் பகுதி, தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் பெரும்பாலான பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் அறிவித்து இருந்தது.

தென் மேற்கு பருவமழை தொடங்கியது
இந்த நிலையில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கேரளாவின் தெற்கு பகுதியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளில் இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் மழை பெய்யலாம் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இந்த பருவமழை செப்டம்பர் மாதம் வரை தொடரும்.

தமிழ்நாட்டுக்கு பயன்
தென்மேற்கு பருவ மழையால் வட இந்திய மாநிலங்களும், இந்தியாவின் சில பகுதிகளும் மழை பெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக கன மழையை எதிர்பாக்கலாம். இதுபோக தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகள் மக்கள் தென் மேற்கு பருவமழையை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

டெல்டா மக்களுக்கு மகிழ்ச்சி
ஏன் என்றால் டெல்டா பகுதிகளை வளம் கொழிக்க வைக்கும் காவிரி ஆற்றின் பிறப்பிடம் கர்நாடகாவில் அமைந்துள்ளது. தென் மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பொழிந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு அந்த தண்ணீர் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செழிக்க வைக்கும். மேலும் இந்த பருவ மழையால் குற்றால அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.