டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

113 டிகிரி எஃப் தகிக்கும் வெப்பம்.. டெல்லி, ஹரியானா, பஞ்சாபிற்கு ரெட் அலர்ட்.. வானிலை மையம் வார்னிங்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெப்பம் தகிக்கும் என்பதால் அந்த மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

    Tamilnadu Weatherman | Hot Weather In Tamilnadu | Reason

    நாடு முழுவதும் மழையும் வெப்பமும் மாறி மாறி இருந்து வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் பெரும்பாலான இடங்களில் 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியிருந்தது.

    அதிகபட்ச வெப்ப நிலையாக 44.4 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 28.7 டிகிரி செல்சியஸும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலையில் வழக்கத்தை விட 5 புள்ளிகள் அதிகமாகவும் குறைந்தபட்ச வெப்பநிலையில் வழக்கத்தை விட இரு புள்ளிகள் அதிகமாகவும் இருந்தது.

    மே 31ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கு? முதல்வரை நாளை சந்திக்கிறது மருத்துவ குழு மே 31ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கு? முதல்வரை நாளை சந்திக்கிறது மருத்துவ குழு

    வெப்பம்

    வெப்பம்

    டெல்லியில் பாலம், லோதி சாலை, அயாநகர் ஆகிய பகுதிகளில் முறையே அதிகபட்சமாக 45.5 டிகிரி செல்சியஸ், 44.2 டிகிரி செல்சியஸ் மற்றும் 45.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. இந்திய வானிலை மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவத்சவா கூறுகையில் மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் அதிக வெப்பம் இருக்கும்.

    ஆரஞ்ச் எச்சரிக்கை

    ஆரஞ்ச் எச்சரிக்கை

    இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மே 28ஆம் தேதி டெல்லியில் கிழக்கு பகுதி காற்று வீசுவதாலும் புதிய மேற்கத்திய காற்று வீசுவதாலும் கடுமையான வெப்பம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 29-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை டெல்லியில் புழுதிப்புயல் வீசும். மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். உத்தரப்பிரதேசத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெப்பநிலை

    வெப்பநிலை

    மக்கள் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். நீர் சத்து குறைபாடை தடுக்க நிறைய தண்ணீர் குடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார். வெப்பக் காற்று என்றால் என்ன என்பதை பார்ப்போம். பெரிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை தொடர்ந்து இரு நாட்களுக்கு இருந்து அடுத்த நாள் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் (116.6 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பநிலை இருக்கும்.

    எச்சரிக்கை

    அதுபோல் டெல்லி போன்ற சிறிய பகுதிகளில் ஒரு நாள் முழுவதும் வெப்பம் 45 டிகிரி செல்சியஸாக இருந்தால் அந்த இடம் வெப்பக் காற்று வீசும் என அறிவிக்கப்படுகிறது. மணிக்கு 20 கி.மீ வேகத்தில் அனல் காற்று வீசும் என இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

    English summary
    India Meteorological Department issues red alert for Delhi, Haryana and Punjab and also advised people to stay in home.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X