டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடல்வழி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம்... இந்திய கடற்படை தளபதி தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: மும்பை தாக்குதல் போல் கடல் வழியாக இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய கடற்படை தளபதி சுனில் லன்மா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த இந்தோ - பசிபிக் கருத்தரங்கில் அவர் பங்கேற்று பேசினார்.

அப்போது, புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியாவை சீர்லைக்க முயற்சிக்கும் நாடு ஒன்று, தீவிரவாதிகளுக்கு உதவுவதாக மறைமுகமாக பாகிஸ்தானை சாடினார்.

பயங்கர சத்தம் கேட்டு பீதியில் விழித்தோம்.. இந்திய தாக்குதல் பற்றி பாலகோட் மதரசா மாணவர்கள் சொன்னது பயங்கர சத்தம் கேட்டு பீதியில் விழித்தோம்.. இந்திய தாக்குதல் பற்றி பாலகோட் மதரசா மாணவர்கள் சொன்னது

தீவிரவாதிகள் பயிற்சி

தீவிரவாதிகள் பயிற்சி

கடல் வழியாக சென்று தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார் . தீவிரவாதத்தின்அனைத்து வடிவங்களையும் அழிக்க சர்வதேச சமுதாயம் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் கடற்படை தளபதி சுனில் லன்மா வலியுறுத்தினார்.

2008-ல் தாக்குதல்

2008-ல் தாக்குதல்

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீனவர்களின் படகை கடத்திக் கொண்டு கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 160க்கும் அதிகமானோர் பலியானார்கள். அதேபோல் மற்றொரு தாக்குதலை நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வீடியோ வெளியீடு

வீடியோ வெளியீடு

இந்நிலையில், இந்திய நீர்மூழ்கி கப்பல் ஒன்று, பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்தது. ஆனால், அதனை தங்களது கடற்படை தடுத்து நிறுத்தியது. அமைதி என்ற பாகிஸ்தானின் கொள்கை காரணமாக, இந்திய கப்பலை நாங்கள் தாக்கவில்லை. என்று பாகிஸ்தான் கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பொய் பிரச்சாரம்

பொய் பிரச்சாரம்

மேலும், இந்திய நீர்மூழ்கி கப்பல் நுழைய முயற்சி செய்ததாக கூறி வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும், பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தில் இதுவும் ஒன்று எனவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு பதிலடி

பாகிஸ்தானுக்கு பதிலடி

முன்னதாக, புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடித் தாக்குதல் நடத்தியபோது இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அபிநந்தனை தவிர மற்றொருவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்திய ஆதாரங்களை , இந்திய ராணுவம் வெளியிட்டு பாகிஸ்தான் முகத்தில் கரியை பூசியது நினைவிற்குரியது.

English summary
Indian Navy: Terrorists plot to carry out maritime attack
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X