டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை குண்டுவெடிப்பு… அப்பாவிகள் மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது…ராம்நாத், ஜெட்லி கண்டனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Srilanka issue | இலங்கை குண்டுவெடிப்பு: மோடி ,ராம்நாத், ஜெட்லி, மமதா கண்டனம்

    டெல்லி:இலங்கை குண்டுவெடிப்புக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அருண் ஜெட்லி, மமதா பானர்ஜி உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கொச்சிக்கடை செயின்ட் அந்தோணியார் , நீர்க்கொழும்பு செபஸ்டியான் ஆலயம் , மட்டக் களப்பில் உள்ள சீயோன் ஆலயம் ஆகிய 3 ஆலயங்களில் பிரார்த்தனையின் போது பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.

    அதில் பலர் ரத்த காயங்களுடன் விழுந்தனர். சம்பவம் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் ஆலயங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலில் சுமார் 200 பேர் வரை பலியாகி உள்ளனர்.

    இலங்கையில் 7வதாக இன்னொரு ஹோட்டலில் குண்டு வெடிப்பு.. பலி எண்ணிக்கை 170 ஐ தொட்டது.. தொடரும் பதற்றம்இலங்கையில் 7வதாக இன்னொரு ஹோட்டலில் குண்டு வெடிப்பு.. பலி எண்ணிக்கை 170 ஐ தொட்டது.. தொடரும் பதற்றம்

     வேண்டுகோள்

    வேண்டுகோள்

    உலகம் முழுவதும் இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டு மக்கள் அமைதியாக இருக்குமாறு அதிபர் சிறிசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ராம்நாத் கோவிந்த் கண்டனம்

    இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

     தாக்குதல்களை ஏற்க முடியாது

    தாக்குதல்களை ஏற்க முடியாது

    இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது. மக்கள் வாழுமிடத்தில் தீவிரவாதத்துக்கு இடமில்லை. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் ஜெட்லி கண்டனம்

    மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும் தமது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:அப்பாவி மக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது.

     பிரார்த்தனை செய்கிறேன்

    பிரார்த்தனை செய்கிறேன்

    இதுபோன்ற மனிதநேயமற்ற தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்த நபர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் எனது பிரார்த்தனை எப்போதும் உண்டு. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

    மமதான பானர்ஜி அதிர்ச்சி

    குண்டு வெடிப்பு தொடர்பாக மமதா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டரில், குண்டு வெடிப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எந்த வகையிலும் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. குண்டு வெடிப்பில் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திகிறேன் என்றார்.

    English summary
    Indian president ramnath govind, Central minister arun jaitley condemns srilankan blast.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X