டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓசி சாப்பாடுக்காக பல்லியை வைத்து டிராமா போட்ட கில்லி தாத்தா.. அந்நியனாக மாறி கப்புனு பிடித்த ரயில்வே

Google Oneindia Tamil News

டெல்லி: இலவசமாக மீண்டும் சாப்பாடு கிடைக்கும் என்பதால் பல்லியை உணவில் போட்டு நாடகமாடிய 70 வயது தாத்தா ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

70 வயது முதியவர் சுரேந்தர் பால், ஜெபல்பூர் செல்லும் ரயிலில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ரயில்வே துறையால் விற்பனை செய்யப்படும் உணவை வாங்கினார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்தார் பால். அப்போது பாதி உண்ட உணவை காண்பித்து உணவில் பல்லி இருப்பதாக புகார் அளித்தார்.

புகார்

புகார்

முதியவர் புகார் விசித்திரமாக இருக்கிறது என்பதால் அதிகாரிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் அருகில் உள்ள மற்ற ரயில் நிலைய அதிகாரிகளை அலர்ட் செய்தார். கடந்த 14-ஆம் தேதி ஜபல்பூர் ரயில் நிலையத்தில் சமோசாவில் பல்லி இருந்ததாக புகார் அளித்தார்.

பொய்

பொய்

அதைத் தொடர்ந்து குண்டுகல் ரயில் நிலையத்தில் பிரியாணியை உண்ட முதியவர் அதிலும் பல்லி இருப்பதாக தெரிவித்தார். 70 வயதான அந்த முதியவர் உணவில் குறை கூறினால் மீண்டும் உணவு கிடைக்கும் என்பதால் இது போன்ற ஒரு பொய்யை கூறியுள்ளார் என்பது தெரியவந்தது.

கெட்டப் பெயர்

கெட்டப் பெயர்

இதையடுத்து குண்டுக்கல் ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த முதியவரிடம் அதிகாரிகள் கூறுகையில், தேசத்துக்கே ரயில்வே துறை பெருமையை அளிக்கிறது. இது பொது மக்களின் சொத்து. இதற்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த வேண்டாம்.

மனநிலை

மனநிலை

நாங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம். ஆனால் நீங்கள் இனி இது போல் செய்யக் கூடாது என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அந்த நபரை விடுவித்தனர். இதுகுறித்து பால் போலீஸாரிடம் கூறுகையில், நான் எந்த தவறையும் செய்யவில்லை. நான் முதியவன், மனநிலையும் சரியில்லை.

மீன்

மீன்

எனக்கு ரத்த புற்றுநோய் உள்ளது. என்னை போகவிடுங்கள். பஞ்சாப்பில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் எலும்பு நோயையும் மனநிலையையும் சரி செய்ய மீனை உட்கொண்டேன் என தெரிவித்தார்.

English summary
70 years old man who tricking Indian Railways by putting lizard in meal to get free meal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X