டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்கெல்லாம், எத்தனை ரயில் கோச்கள் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டது? தமிழச்சி கேள்விக்கு பியூஷ் பதில்

Google Oneindia Tamil News

டெல்லி: தனிமைப்படுத்தப்பட்ட வார்டு தொடர்பாக, லோக்சபா திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும், சுரேஷ் நாராயண் ஆகிய எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார்.

லாக்டவுன் காலகட்டத்தின்போது, கொரோனா சிகிச்சை மற்றும் பராமரிப்புக்கு, நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தலுக்கு ரயில் கோச்களை வழங்கியுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் நாட்டில் மாற்றப்பட்ட ரயில் கோச்களின் பயன்பாட்டு நிலை, ரயில்வே மண்டலம் வாரியாக கூற முடியுமா? இவ்வாறு எம்பிக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

Indian Railways converted 5231 coaches into corona isolation coaches

பியூஷ் கோயல் அளித்த பதில்: ஏசி வசதி இல்லாத 5231 ஐசிஎப் கோச்களில் எண்ணிக்கையை தற்காலிகமாக கோவிட் -19 தனிமைப்படுத்தும் பிரிவுகளாக இந்திய ரயில்வே மாற்றியது.

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 69,671 ஆக குறைந்தது... 2ஆம் இடத்தில் ஆந்திரா!! இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 69,671 ஆக குறைந்தது... 2ஆம் இடத்தில் ஆந்திரா!!

மண்டல வாரியாக.., மத்திய ரயில்வே மண்டலத்தில் 482, கிழக்கு ரயில்வேயில் 380, மத்திய கிழக்கு மண்டலத்தில் 269, கிழக்கு கடற்கரை மண்டலத்தில் 261, வடக்கு ரயில்வேயில் 540, மத்திய வடக்கு மண்டலத்தில் 130, வட கிழக்கு மண்டலத்தில் 217, வடகிழக்கு ஃப்ரான்டியர் ரயில்வே மண்டலத்தில் 315, வட மேற்கு ரயில்வேயில் 266, தெற்கு ரயில் வேயில் 573, மத்திய தெற்கு ரயில்வேயில் 486, தென் கிழக்கு ரயில்வேயில் 338, தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் 111, தென் மேற்கு ரயில்வேயில் 320, மேற்கு ரயில்வேயில் 410 மத்திய மேற்கு ரயில்வேயில் 133 கோச்கள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டன.

English summary
Indian Railways had converted 5231 Nos. of Non-AC ICF coaches into isolation coaches temporarily as COVID-19 isolation units during lockdown crisis. Zone wise status is as under below.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X