டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயணிகள் பாதுகாப்பை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்துள்ள இந்திய ரயில்வே!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் செயல்படும் இந்திய ரயில்வே பாதுகாப்பு மற்றும் நெரிசல் இல்லாத பயணத்திற்கே முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது.

2014ம் ஆண்டு முதல் ஏற்பட்டு வரும் தொடர் ரயில் விபத்துகள், அசாதாரண மரணங்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையின் பலனாக 2017 -18ல் ரயில் விபத்துகள் 73ஆக குறைந்துள்ளது.

 Indian railways ensures safety and hassle free travel

2013-14ல் 118 ரயில் விபத்துகள் நடந்த நிலையில் 2017-18ல் இது 73ஆக அதாவது சுமார் 63 சதவீதம் குறைந்துள்ளது. பழைய ரயில்பாதைகளை மாற்றியமைத்தல், பராமரித்தல் உள்ளிட்டவற்றால் இது சாத்தியமாகியுள்ளது. ரயில் பாதையை புதுப்பிக்கும் பணி 50 சதவீதம் அதிகரித்துள்ளது, 2013-14ல் 2,926 கிலோமீட்டர் பாதைகள் புதுப்பிக்கப்பட்ட நிலையில், 2017-18ல் 4,405 கிலோ மீட்டர் ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் இருந்து அவுரா செல்லும் ராஜதானி எக்பிரஸ் உள்ளிட்ட 14 பிரிமியர் ரயில்களின் இயக்க நேரத்தை ரயில்வே குறைத்துள்ளது. நெரிசல் மிக்க பகுதிகளில் சிக்னல் முறையை மேம்படுத்துவதற்காக பாட்னா, டெல்லி - அமிர்தசரஸ் சதாப்தி ரயில் இயக்கமும் குறைக்கப்பட்டுள்ளது. 2016 அக்டோபரில் 350 மெயில்கள்/விரைவு ரயில்கள் மற்றும் ராஜதானி, சதாப்தி உள்பட 74 அதிவிரைவு ரயில்கள் 5-25 நிமிடங்கள் முன்னதாகவே ரயில் நிலையத்தை வந்தடைகின்றன. ரயில் கால அட்டவணையில் இருந்த சிக்கல்களை களைந்ததையடுத்து இதை செய்ய முடிந்துள்ளது.

[ஜிஎஸ்டி வரி விதிப்பால் ரெஸ்டாரண்டுகளில் குறைந்த உணவு விலை! வாடிக்கையாளர்கள் குஷி]

இந்த ஆண்டு ரயில்வே அமைச்சகம் அகில இந்திய ரயில்களின் புதிய கால அட்டவணையை டேக் (TAG) 'ரயில்கள் பற்றிய ஒரு பார்வை' என்று வெளியிட்டுள்ளது. 2018 ஆகஸ்ட் 15 முதல் இது செயல்முறைக்கு வந்துள்ளது. அகில இந்திய ரயில் கால அட்டவணையோடு 17 மண்டல ரயில்களும் தங்கள் மண்டலத்திற்குட்பட்ட ரயில்வே கால அட்டவணையை வெளியிட்டுள்ளன (5 மண்டல கால அட்டவணைகள், ஒவ்வொரு மண்டல அட்டவணையிலும் 3-4 மண்டல ரயில்வேயின் தகவல்களை உள்ளடங்கியுள்ளன).

2017-18ல் 90 புதிய ரயில் சேவைகளும், 43 ரயில் சேவைகள் விரிவாக்கமும் செய்யப்பட்டுள்ளன. 9 ரயில்களின் இயக்க நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அதாவது 15.08.2018 வரை 35 ரயில் சேவைகள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன, 28 ரயில் சேவைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

English summary
Safety and hassle free travel became the top priorities of the Indian Railways under the PM Modi government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X