டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் இன்று முதல் இயக்கம்.. சென்னை உள்பட 30 ரயில்கள் விவரம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் 15 நகரங்களுககு இன்று முதல் முதற்கட்டமாக இயக்கப்பட உள்ள 30 ரயில்களின் விவரம் வெளியாகி உள்ளது.

சென்னை, பெங்களூரு, செகந்திராபாத் (ஹைதராபாத்), அகர்தலா, மும்பை, பாட்னா, புவனேஸ்வர், திருவனந்தபுரம், அகமதாபாத், ஜம்மு தாவி, திப்ரகார்க், அகர்தலா, ஹவுரா (கொல்கத்தா), பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, மடகோன் (கோவா) உள்பட 15 நகரங்களுக்கு ரயில் சேவைகள் டெல்லியில் இருந்து இன்று (மே 12ம் தேதி முதல்) இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கண்ட நகரங்களில் இருந்தும் டெல்லிக்கு ரயில்கள்இயக்கப்பட உள்ளது. இவை அனைத்தும் சிறப்பு ரயில்களாக அறிவித்து பட்டியல்களை வெளியிட்டுள்ளது.

Indian Railways passenger train operations from today , trains list here

இந்த ரயில்கள் எல்லாம் வழங்கமாக நின்று செல்லும் ரயில் நிலையங்களில் எல்லாம் நின்று செல்லாது. சிறப்பு ரயில்கள் அனைத்தும் சில இடங்களில் மட்டுமே நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து சென்னைக்கு வெள்ளி ஞாயிறு கிழமைகளில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதேபோல் சென்னையிலிருந்து டெல்லிக்கு புதன், வெள்ளி கிழமைகளில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

விழுப்புரம் மாணவி மிருகத்தனமாக கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது.. முதல்வர் கடும் கண்டனம்விழுப்புரம் மாணவி மிருகத்தனமாக கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது.. முதல்வர் கடும் கண்டனம்

திருவனந்தபுரத்திற்கும் டெல்லியில் இருந்து ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ஆனால் அந்த ரயில்கள் மங்களூரு வழியாக கேரளாவிற்கு செல்ல உள்ளதாக தமிழகத்திற்கு அவை எதுவும் இப்போதைக்கு வராது.

Indian Railways passenger train operations from today , trains list here

ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று இரவு நடந்தது. சுமார் 54000 டிக்கெட்டுக்ள் விற்று தீர்ந்தன. இந்த ரயில்களில் ஏறுவதற்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் (கான்பார்ம் டிக்கெட்) வைத்துள்ளவர்களை மட்டுமே ரயில் நிலையங்களுக்கு அனுமதிக்க உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. ரயிலில் ஏறும் முன்பு பயணிகள் அனைவருக்கும் ஸ்கிரீன் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. கொரோனா அறிகுறி அற்ற பயணிகள் மட்டுமே ரயிலில் செல்ல அனுமதிக்கப்பட உள்ளார்கள். ரயில் பயணிகள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.

English summary
Indian Railways passenger train operations from today, 30 passenger trains list
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X