டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மே 12 முதல் குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும்.. ரயில்வே அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் வரும் மே 12 ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மார்ச் 25ம் தேதி தொடங்கி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு மூன்று முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் மெல்ல மெல்ல தளர்வுகளை அளித்து வந்த மத்திய அரசு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மட்டும் ரயில்களை இயக்கி வந்தது. இதேபோல் சரக்கு ரயில்களை இயக்கி வருகிறது.

பச்சை மண்டலங்கள் இடையே மட்டுமே இயக்க விமான நிறுவனங்கள் மறுப்பு.. விமான சேவை எப்போது தொடங்கும்? பச்சை மண்டலங்கள் இடையே மட்டுமே இயக்க விமான நிறுவனங்கள் மறுப்பு.. விமான சேவை எப்போது தொடங்கும்?

கடைகள் திறப்பு

கடைகள் திறப்பு

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் உயிரிழப்புகள் மிக குறைவாகவே இருந்து வந்த நிலையில் மத்திய அரசு தற்போது அதிரடியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்களை செயல்பட அனுமதி அளித்துள்ளது. பல்வேறு கடைகளை திறக்கவும் அனுமதி அளித்துள்ளது.

மே 12 முதல்

மே 12 முதல்

அந்த வகையில் நாடு முழுவதும் வரும் மே 12 ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை படிப்படியாகஇயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து மட்டுமே ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. டெல்லியில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

டெல்லியில் இருந்து

சென்னை, பெங்களூரு, செகந்திராபாத் (ஹைதராபாத்), அகர்தலா, மும்பை, பாட்னா, புவனேஸ்வர், திருவனந்தபுரம், அகமதாபாத், ஜம்மு தாவி, திப்ரகார்க், அகர்தலா, ஹவுரா (கொல்கத்தா), பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, மடகோன் (கோவா) உள்பட 15 நகரங்களுக்கு ரயில் சேவைகள் டெல்லியில் இருந்து மே 12ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 11ம் தேதி மாலை 4 மணிக்கு ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர அட்டவணை

நேர அட்டவணை

பயணிகள் முககவசம் அணிந்து இருக்க வேண்டியது கட்டாயம். ரயிலில் புறப்படும் முன்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக இருக்கும், மேலும் கொரோனா அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். ரயில் அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் சரியான நேரத்தில் தனித்தனியாக வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

English summary
Indian Railways plans to gradually restart passenger train operations from 12th May, initially with 15 pairs of trains (30 return journeys): Ministry of Railways
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X