டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பெல்ஜியம், பின்லாந்தில் இந்திய மாணவர்கள் போராட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பின்லாந்து, பெல்ஜியம் நாடுகளில் இந்திய மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

பின்லாந்தின் தெற்கு தலைநகரான ஹெல்சின்கியில் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் சட்டமானது மத அடிப்படையில் குடியுரிமை வழங்க, நிராகரிக்க வகை செய்கிறது. இச்சட்டம் பாரபட்சமானது என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Indian students protest agains CAA in Belgium

என்கவுன்ட்டரில் பலியான சென்னகேசவலுவுக்கு 4 மாதங்களுக்கு முன் திருமணம்.. 13 வயது மனைவி கர்ப்பம் என்கவுன்ட்டரில் பலியான சென்னகேசவலுவுக்கு 4 மாதங்களுக்கு முன் திருமணம்.. 13 வயது மனைவி கர்ப்பம்

மேலும் இந்தியாவின் வரலாறு என்பதே அனைத்து சித்தாந்தங்கள், அடையாளங்களின் ஒருங்கிணைந்ததாகவே இருக்கிறது. இதை சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசின் சட்டம் இருக்கிறது எனவும் போராட்டக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு எதிராகவும் அவர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Indian students protest agains CAA in Belgium

இதேபோல் பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் இந்திய மாணவர்கள் ஒன்று திரண்டு மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்தியாவின் ஜனநாயக மாண்புகளுக்கும் அரசியல் சாசனத்துக்கும் விரோதமானதாக மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் இருக்கிறது எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

ஜெர்மனியிலும் போராட்டம்

இதேபோல் ஜெர்மனியிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை விமர்சிக்கும் பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர்.

English summary
Indian students and professionals in Belgium protest against the Centre's amended Citizenship Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X