டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    Citizen Amendment Bill | Rahul Gandhi tweets CAB is an attempt to ethnically cleanse NE India

    டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு தொடர்ந்துள்ளது.

    1955-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது. இம்மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

    Indian Union Muslim League to move SC against CAB

    அஸ்ஸாம், மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்கள் பற்றி எரிகின்றன. அங்கு நிலைமையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் சட்ட ரீதியாக இம்மசோதா செல்லாது; நீதிமன்றத்தால் இம்மசோதா நிராகரிக்கப்படும் என தொடர்ந்து கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முடிவு செய்துள்ளது. அரசியல் சாசனத்தின் 14-வது சரத்துக்கு எதிராக இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி இவ்வழக்கு தொடரப்பட உள்ளது.

    English summary
    Citizenship Amendment Bill will face first legal challenge as Indian Union Muslim League (IUML) has decided to file a writ petition in the Supreme Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X