டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

18 இஸ்லாமிய நாடுகளில் வேலை செய்ய மத்திய அரசிடம் முன்பே பதிய வேண்டும்.. புதிய விதியால் சர்ச்சை!

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 18 நாடுகளுக்கு இந்தியர்கள் வேலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் மத்திய அரசின் இணைய பக்கத்தில் அதை முன்பதிவு செய்ய வேண்டும்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இஸ்லாமிய நாடுகளில் வேலை செய்ய முன்பே பதிவு செய்ய வேண்டும்- வீடியோ

    டெல்லி: ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 18 நாடுகளுக்கு இந்தியர்கள் வேலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் மத்திய அரசின் இணைய பக்கத்தில் அதை முன்பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆணையிட்டுள்ளது.

    இந்தியர்கள் வெளிநாடுகளில் வேலை பார்க்க வேண்டும் என்றால், வேலை பார்க்க போகும் நாட்டின் விசாவும், அந்த நாட்டில் இருக்கும் சட்ட விதிகளையும் பூர்த்தி செய்தால் மட்டும் போதும். குற்றவாளியாக இல்லாத பட்சத்தில், இந்திய அரசு நமது வெளிநாட்டு பயணத்தையும், வெளிநாட்டில் வேலை பார்ப்பதையும் தடுக்க வாய்ப்பில்லை.

    ஆனால் மத்திய அரசு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்வதற்கு மட்டும், தற்போது சில முக்கிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இது சில சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.

    என்ன செய்ய வேண்டும்

    என்ன செய்ய வேண்டும்

    இந்த புதிய விதியின்படி ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 18 நாடுகளுக்கு இந்தியர்கள் வேலை பார்க்க செல்ல வேண்டும் என்றால் மத்திய அரசின் இணைய பக்கத்தில் அதை முன்பதிவு செய்ய வேண்டும். மத்திய அரசின் https://emigrate.gov.in/ இணைய பக்கத்தில் நம்முடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதில் உள்ள தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

    அனுமதி கிடையாது

    அனுமதி கிடையாது

    இந்த விவரங்களை பதிவு செய்யவில்லை என்றாலோ இல்லை இதில் மத்திய அரசின் வரையறைகளை பூர்த்தி செய்யவில்லை என்றாலோ நம்மால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. விமான நிலையத்திலேயே நம்மை வெளியேற்ற நேரிடும் என்று கூறியுள்ளனர். பாதுகாப்பு காரணமாக இந்த விதியை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    எந்த நாடுகள்

    எந்த நாடுகள்

    ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, ஈராக், ஜோர்டன், லிபியா, லெபனான், சிரியா, எமன், சூடான், தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாடுகள் அனைத்தும் இஸ்லாமிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன பிரச்சனையாகும்

    என்ன பிரச்சனையாகும்

    இது முழுக்க முழுக்க இஸ்லாமிய நாடுகளில் வேலை செய்யும் பணியாளர்களை பாதிக்க வாய்ப்புள்ளது. புதிதாக அந்த நாடுகளுக்கு செல்லும் மக்கள் முன்பு போல எளிதாக செல்ல முடியாது. இது தென்னிந்தியர்களை, குறிப்பாக அரபு நாடுகளில் அதிகம் வேலை பார்க்கும் தமிழர்களையும், மலையாளிகளையும் அதிகம் பாதிக்கும்.

    English summary
    Indians traveling to Arab countries for work must pre-register governments online.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X