டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரவு ஊரடங்கிலும் தளர்வு.. இனி இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே.. உள்துறை அமைச்சகம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜூன் 1-ஆம் தேதி முதல் மத்திய உள்துறை அமைச்சகம் இரவு ஊரடங்கிலும் தளர்வு வழங்கியுள்ளது. அதன்படி இனி இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்தியா முழுவதும் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

Individuals Movement will be prohibited from 9 pm to 5 am across the country

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத இடங்களில் ஜூன் 1ஆம் தேதி முதல் புதிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஜூன் 8ஆம் தேதி முதல் வழிப்பாட்டு தலங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்டுகள், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

வெளியூர் பயணத்திற்கான தடைகள் அனைத்தையும் உள்துறை அமைச்சகம் நீக்கியது. இதற்காக எந்தவித அனுமதியையும் பெறத் தேவையில்லை. அது போல் இரவு நேர ஊரடங்கிலும் தளர்வு அளித்துள்ளது. அதாவது ஜூன் 1-ஆம் தேதி இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அத்தியாவசியத் தேவைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என புதிய தளர்வுகளில் தெரிவித்துள்ளது. இந்த தளர்வுகள் நாடு முழுவதும் பொருந்தும்.

லாக்டவுன் 5.0.. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜுன் 30 வரை ஊரடங்கு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு! லாக்டவுன் 5.0.. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜுன் 30 வரை ஊரடங்கு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

முன்னதாக இரவு 7 மணி வரை காலை 7 மணி முதல் தனிநபர் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு இருந்த நிலையில் தற்போது தளர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளித் திறப்பு பற்றி ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு (UNLOCK 1) என்ற தலைப்பில் மத்திய உள்துறை வெளியிட்டுள்ளது.

English summary
Night curfew will continue with a revised schedule. Now movement will be prohibited from 9 pm to 5 am across the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X