டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேச்சுவார்த்தைக்கு கைமேல் பலன்... லடாக் எல்லையில் படைகளை விலக்கிக் கொள்ளும் இந்தியா-சீனா!

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவ படைகள் அங்கிருந்து விலகிக் கொள்ள ஆரம்பித்துள்ளன.

எல்லை பகுதிதிகளில் பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா... 5 பேர் உயிரிழப்பு! தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா... 5 பேர் உயிரிழப்பு!

கிழக்கு லடாக்கின் நிலைமையை உறுதிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் பயனுள்ள முயற்சிகளை தொடரவும் இரு நாட்டு ராணுவமும் முடிவு செய்துள்ளன.

லடாக் எல்லை பதற்றம்

லடாக் எல்லை பதற்றம்

இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து எல்லையில் இருதரப்பு படையினரும் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. ராணுவ அதிகாரிகள் அளவில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து படைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடரும் பேச்சுவார்த்தை

தொடரும் பேச்சுவார்த்தை

பாங்காங் ஏரி கரையில் இரு தரப்புக்கும் இடையே சமீபத்தில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. கடந்த ஒன்பது மாதங்களாக கிழக்கு லடாக்கில் எல்லை நிலைப்பாட்டிற்கு மத்தியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதலில் பங்கோங் ஏரி மையமாக உள்ளது. எல்லை பகுதிதிகளில் பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.

படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

கடந்த மாதம் ஒன்பதாவது சுற்று இராணுவப் பேச்சுவார்த்தை நடந்தது. சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவும், சீனாவும் எல்லையில் இருந்து துருப்புக்களை முன்கூட்டியே விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. கிழக்கு லடாக்கின் நிலைமையை உறுதிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் பயனுள்ள முயற்சிகளை தொடரவும் இரு நாட்டு ராணுவமும் முடிவு செய்தன.

சீனா கருத்து

சீனா கருத்து

இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தையின் பலனாக பாங்காங் ஏரியின் வடக்கு கரையில் இந்திய, சீன ராணுவம் தங்களது வீரர்களை அங்கிருந்து விலகிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. இதனை உறுதிப்படுத்திய சீன தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் வு கியான், ''கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு கரையில் உள்ள சீனா மற்றும் இந்தியாவின் முன்னணி வீரர்கள் இன்று முதல் பின்வாங்கும் பணிகள் தொடங்கபப்டுகிறது என்றார். ஆனால் இந்தியா தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

English summary
Indo-Chinese troops have begun to withdraw from the Ladakh border
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X