டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று இந்தியா வரும் அமெரிக்க டாப் அமைச்சர்கள்.. 2+2 ஆலோசனை.. "ஜப்பான் மாதிரி நடக்காது.." அலறும் சீனா

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் இன்று டெல்லி வருகிறார்கள்.

இந்திய அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையில், 2 + 2 அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம் கடந்த 2018 முதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

இப்பேச்சுவார்த்தை இப்போது 3வது ஆண்டாக நாளை நடக்க உள்ளது.

சீனா விவகாரத்தில் உங்களுக்குத்தான் உண்மை தெரியும்... ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் மீது ராகுல் பாய்ச்சல் சீனா விவகாரத்தில் உங்களுக்குத்தான் உண்மை தெரியும்... ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் மீது ராகுல் பாய்ச்சல்

அமைச்சர்கள் வருகை

அமைச்சர்கள் வருகை

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் ஆகியோர் இன்று டெல்லி வருகிறார்கள். இவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது, நமது நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்பார்கள்.

தேர்தலுக்கு ஒரு வாரம்

தேர்தலுக்கு ஒரு வாரம்

இந்தியா-அமெரிக்க பேச்சுவார்த்தைகள் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நடக்கிறது. மேலும் சீனாவுடனான இந்தியாவின் எல்லை பிரச்சினைக்கு இடையே இக் கூட்டம் நடப்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த சந்திப்புக்கு பிறகு வீடியோ காலில் பிரதமர் மோடியுடன் இவ்விறு அமைச்சர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

சீனாவின் தந்திரங்கள்

சீனாவின் தந்திரங்கள்

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான சீனாவின் முயற்சிகள், மற்றும் கிழக்கு லடாக்கில் சீனாவில் எல்லை மீறல் உள்ளிட்டவை பற்றி இந்தியா-அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதறும் சீனா

பதறும் சீனா

மைக் பாம்பியோ மற்றும் எஸ்பரின் இந்தியா வருகை சீனாவை கலங்க வைத்துள்ளது. சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸில் வெளியான ஒரு செய்தியில் இந்த பதற்றம் தென்படுகிறது. ஜப்பானுடன் இருப்பதை போல இந்தியாவுடன் அமெரிக்காவால் கூட்டாளியாக முடியாது. இந்தியா தன்னை சக்திவாய்ந்த நாடாக நினைக்கிறது. எனவே வேறு ஒரு வல்லரசுடன் அது இணைந்து போகாது என்று கூறியுள்ளது அந்த கட்டுரை.

சீனாவுக்கு எதிராக

சீனாவுக்கு எதிராக

மைக் பாம்பியோ மற்றும் மார்க் எஸ்பர் ஆகிய இருவரும், இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்ய இருக்கிறார்கள். சீனாவின் ஆதிக்கம் இந்த நாடுகளில் இருக்கிறது. எனவே அமெரிக்க அமைச்சர்கள் பயணம், சீனாவுக்கு எதிரான அணி திரட்டலாக பார்க்கப்படுகிறது.

English summary
Secretary of State Mike Pompeo and Defence Secretary Mark T Esper will arrive in India on Monday for the third edition of the two-plus-two ministerial dialogue which will be held on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X