டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 லட்சம் ஏக்கரில் தொழில் பூங்காக்கள்.. நாடு முழுக்க தரவரிசைப்படுத்தப்படும்.. நிர்மலா சீதாராமன்!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் தொழில் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும், தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான 5 லட்சம் ஹெக்டேர் நிலம் கையிருப்பில் உள்ளன என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Industrial parks will be created in 5 lakh acre says FM Nirmala

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார். கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வதே இன்றைய அறிவிப்புகளின் முக்கிய நோக்கம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்.. பல சவாலுக்கு தயாராக வேண்டும்.. நிர்மலா சீதாராமன் அழைப்பு!சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்.. பல சவாலுக்கு தயாராக வேண்டும்.. நிர்மலா சீதாராமன் அழைப்பு!

அவர் தனது பேட்டியில், ஜிஎஸ்டி, நேரடி மானியம் ஒரே நாடு ஒரே ரேசன் போன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் மக்கள் பலன் அடைந்து உள்ளனர் . ஜிஎஸ்டி போன்ற வரி சீர்திருத்தங்களால் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா விளங்கி வருகிறது. நமது தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின் அடிப்படை.

உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு உருவாக்குவதே நோக்கம்.கொரோனா காரணமாக பட்ஜெட் தாக்கலாகி நீண்ட காலம் ஆனது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போதுதான் பட்ஜெட் தாக்கல் ஆகி உள்ளது. பட்ஜெட்டின் பயன்கள் இனி தெரிய வரும்.

வளர்ந்து வரும் புதிய துறைகளை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. முக்கியமான 8 துறைகள் மீது இன்று கவனம் செலுத்துகிறோம். விமானம், கனிமங்கள், விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்பு தளவாட உற்பத்தி உள்ளிட்ட துறைகள் மீது இன்று கவனம் செலுத்துவோம். நாடு முழுவதும் தொழில்நுட்ப பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும்.

Recommended Video

    பல துறைகளில் தனியார் முதலீடுக்கு அனுமதி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

    இதற்காக நிலங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான 5 லட்சம் ஹெக்டேர் நிலம் கையிருப்பில் உள்ளன. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். மேக் இன் இந்தியா திட்டம் இதன் மூலம் ஊக்குவிக்கப்படும்.மேக் இன் இந்தியா திட்டத்திற்காக தனியான ஊக்கத் தொகை வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியர்கள் மனங்களில் மாற்றம் கொண்டு வர இந்த திட்டம் வெளியானது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Industrial parks will be created in 5 lakh acre says FM Nirmala Sitharaman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X