டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா, ஸ்பானிஷ் ப்ளூ.. 2 கொடிய வைரஸ்களை வீழ்த்திய சூப்பர் ஹீரோ.. டெல்லியில் 106 வயது முதியவர் சாதனை

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் 100 ஆண்டுகளுக்கு முன் ஸ்பானிஷ் ப்ளூ (Spanish Flu) என்ற கொடிய நோய் தாக்குதலிடம் இருந்து தப்பித்த 106 வயது முதியவர் ஒருவர் தற்போது கொரோனா வைரஸில் இருந்து தப்பித்து இருப்பது பெரிய ஆச்சர்யத்தை கொடுத்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் நாளுக்கு நாள் இந்தியாவில் பலி எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. இளம் வயதுக்காரர்களும் கூட இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகும் சம்பவங்கள் நடக்கிறது.

இளைஞர்கள் கூட கொரோனாவிற்கு பலியாகும் நிலையில் தற்போது டெல்லியில் 106 வயது முதியவர் ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து இருக்கிறார். இவர் ஸ்பானிஷ் ப்ளூ (Spanish Flu) நோய் தாக்குதலில் இருந்தும் குணமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 காற்றிலும் கொரோனா வைரஸ் பரவுமாம்.. குண்டைப் போடும் விஞ்ஞானிகள்.. ஆய்வில் புதிய தகவல் காற்றிலும் கொரோனா வைரஸ் பரவுமாம்.. குண்டைப் போடும் விஞ்ஞானிகள்.. ஆய்வில் புதிய தகவல்

யார் இவர்

யார் இவர்

டெல்லியை சேர்ந்த இவருக்கு 106 வயது ஆகிறது. உலகம் முழுக்க 1918ல் ஸ்பானிஷ் ப்ளூ (Spanish Flu) தாக்கியது. அப்போது இவருக்கு 4 வயது ஆகும். அப்போது ஸ்பானிஷ் ப்ளூ (Spanish Flu) தாக்கி, அதில் இருந்து தப்பித்த இவர், தற்போது கொரோனா வைரஸில் இருந்தும் தப்பித்து உள்ளார். இவரின் குடும்பத்தில் இருக்கும் எல்லோருக்கும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.

கொரோனா தாக்குதல்

கொரோனா தாக்குதல்

இவரின் 70 வயது மகன், 65 வயது மருமகள், 100 வயது மனைவி என்று எல்லோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இந்த 106 வயது முதியவர் தனது மகனை விட வேகமாக கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளார். இவருக்கு ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்பானிஷ் ப்ளூ என்றால்

ஸ்பானிஷ் ப்ளூ என்றால்

ஸ்பானிஷ் ப்ளூ (Spanish Flu) என்பது 1918ல் உலகம் முழுக்க பரவிய மிக கொடுமையாக ப்ளூ வகை வைரஸ் ஆகும். உலகமே முழுக்க இதனால் மொத்த மக்கள் தொகையில் 3ல் ஒருவர் பாதிக்கப்பட்டார். கொரோனா வைரஸை விட இது மோசமானது ஆகும். ஒரு வகை எச்1என்1 வகை வைரஸ் மூலம் ஸ்பானிஷ் ப்ளூ (Spanish Flu) பரவியது. இந்த ஸ்பானிஷ் ப்ளூ (Spanish Flu) எங்கே உருவானது என்று இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை.

எத்தனை பேர் மரணம்

எத்தனை பேர் மரணம்

இந்த ஸ்பானிஷ் ப்ளூ (Spanish Flu) காரணமாக உலகம் முழுக்க 4 கோடி பேர் பலியானார்கள். இந்தியாவில் மட்டும் இதில் 5ல் ஒருவர் பலியானார். ஸ்பானிஷ் ப்ளூ (Spanish Flu) மொத்தம் இரண்டு அலையாக உலகை தாக்கியது. இரண்டு வருடம் இந்த வைரஸ் உலகில் நிலைகொண்டு இருந்தது. ஸ்பானிஷ் ப்ளூ 1918ல் இந்த 106 வயது கொண்ட முதியவரை தாக்கியது என்று அவரின் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் ஆதாரம்

ஆனால் ஆதாரம்

ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் அவர் ஸ்பானிஷ் ப்ளூ (Spanish Flu) பரவிய காலத்தில் வாழ்ந்து இருக்கிறார்.அந்த மோசமான நோய் தாக்குதலுக்கு அவர் பலியாகவில்லை. தற்போது கொரோனா காலத்திலும் வாழ்ந்து வருகிறார். கொரோனா தாக்கி அதில் இருந்து வேகமாக விடுபட்டு உள்ளார். 106 வயதில் இவர் இவ்வளவு வலிமையாக இருப்பது உலகையே ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

Recommended Video

    லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கிய கொடூரமான சில பெருந்தொற்று நோய்கள் | Oneindia Tamil

    English summary
    The inspiring story of a 106-year-old man who survived Two major pandemics in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X