டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பணத்தை பற்றி கவலைப்படாதீர்கள்னு கூறுவாரே.. கொல்லப்பட்ட உளவுத் துறை அதிகாரியின் பெற்றோர் கதறல்

Google Oneindia Tamil News

டெல்லி: பணத்தை பற்றி கவலைப்படாதீர் என்றும் மருத்துவ செலவுகள் குறித்தும் கவலைப்படாதீர் என்றும் எங்கள் மகன் அவ்வப்போது கூறுவார் என டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவு துறை அதிகாரி அன்கிட் ஷர்மாவின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஜாபர்பாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் தொடங்கியது.

இந்த நிலையில் ஜாபர்பாத், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நடக்கிறது.

சென்னை தந்த பயிற்சி.. ஒரே இரவில் நீதிபதி முரளிதருக்கு டிரான்ஸ்பர்.. அதிரடிகளின் நாயகன்.. யார் இவர்?சென்னை தந்த பயிற்சி.. ஒரே இரவில் நீதிபதி முரளிதருக்கு டிரான்ஸ்பர்.. அதிரடிகளின் நாயகன்.. யார் இவர்?

குடும்பம்

குடும்பம்

இந்த வன்முறையில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். 105-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறையில் உளவு அதிகாரி அன்கிட் ஷர்மா (26) அடித்து கொல்லப்பட்டு அவரது உடல் சாக்கடையில் இருந்து புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இவரது மரணத்தால் அவரது குடும்பத்தினர் நிலைக்குலைந்துள்ளனர்.

மர்ம கும்பல்

மர்ம கும்பல்

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில் அங்கிட் பணிமுடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் உள்பட 3 பேரை மர்ம கும்பல் இழுத்து சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறினர். அந்த 3 பேரில் எங்கள் மகனும் ஒருவர். டெல்லி போலீஸில் பணி கிடைத்தது. ஆனால் அவர்தான் உளவு துறையை தேர்ந்தெடுத்தார்.

அப்பாவி

அப்பாவி

என் மகன் அப்பாவி. உலக நடப்புகள் ஏதும் அறியாதவர். அவர் அடிக்கடி எங்களிடம் ஒரு விஷயத்தை கூறுவார். பணத்தை பற்றி கவலைப்படாதீர்கள். மருத்துவ செலவுகள் குறித்தும் கவலைப்படாதீர்கள். ஆம் ஆத்மி கட்சியினர்தான் அங்கிட்டை தாக்கி கொலை செய்தனர். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என அந்த குடும்பத்தினர் அழுதனர்.

போலீஸ் நிலையம்

போலீஸ் நிலையம்

இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில் நானும் உளவுத் துறையில் பணியாற்றி வருகிறேன். ஆம் ஆத்மியை சேர்ந்த ஒரு தலைவர்தான் அன்கிட்டை கடுமையாக தாக்கினார். அவர்தான் எங்கள் மகனை கொலை செய்தார். பின்னர் அங்கிட்டை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதுகுறித்து நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்றார்.

English summary
Intel Officer Ankit Sharma says his family that dont bother about money and not to worry about medical expenses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X