டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி கலவரம் குறித்து முன்கூட்டியே 6 முறை எச்சரித்த உளவுத் துறை.. கண்டுகொள்ளாத போலீஸ்?

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை கலவரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக 6 முறை டெல்லி போலீஸுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தும் கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

Recommended Video

    Delhi CAA riot | Delhi Journalist's experience during CAA clashes

    டெல்லியில் ஜாபர்பாத் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து ஜாபர்பாத், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நடக்கிறது. இந்த கலவரத்தால் 34 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அப்புறம் என்னப்பா.. சீக்கிரமா புள்ள குட்டிய பெத்துக்குவோம்!அப்புறம் என்னப்பா.. சீக்கிரமா புள்ள குட்டிய பெத்துக்குவோம்!

    போலீஸ்

    போலீஸ்

    இந்த வன்முறையால் செய்தியாளர்கள், பொதுமக்கள், அப்பாவி மக்கள் என அனைவரும் தாக்கப்படுகின்றனர். சிறார்கள் கூட கையில் இரும்பு கம்பிகள், கட்டைகள், கற்களை வைத்து கொண்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் இந்த கலவரம் குறித்து உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்தும் கலவரத்தை கட்டுப்படுத்த டெல்லி போலீஸ் தவறிவிட்டதாக கூறப்படுகிறது.

    சிஏஏ ஆதரவு

    சிஏஏ ஆதரவு

    இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், சிறப்பு பிரிவும் உளவுத் துறையும் வயர்லெஸ் மூலம் டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்துக்கு பல்வேறு எச்சரிக்கைகளை அனுப்பின. வடகிழக்கு மாவட்டத்தில் கலவரம் ஏற்படும் நிலை உள்ளது, எனவே அங்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரியுங்கள் என அறிவுறுத்தினர். அது போல் பாஜக மூத்த தலைவர் கபில் மிஸ்ரா மவ்ஜ்பூர் சவுக்கில் 3 மணிக்கு சிஏஏ ஆதரவு கூட்டம் நடப்பதாக தனது ட்விட்டரில் 1.22 மணிக்கு அறிவித்தார்.

    உளவுத் துறை

    உளவுத் துறை

    இதையடுத்து கண்காணிப்பை அதிகரிக்குமாறும் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. கலவரம் நடப்பதற்கு முன்பும், அந்த பகுதியில் கல்வீச்சு சம்பவம் தொடங்கிய பிறகும் டெல்லி போலீஸுக்கு ஏராளமான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டது. ஆனால் இதை டெல்லி போலீஸ் மறுத்துள்ளது. தங்களுக்கு எச்சரிக்கை கிடைத்தவுடன் பாதுகாப்பு தொடர்பான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத போலீஸ்காரர் ஒருவர் தெரிவித்தார்.

    டெல்லி போலீஸ் மறுப்பு

    டெல்லி போலீஸ் மறுப்பு

    டெல்லி வன்முறை உளவுத் துறையின் தோல்வியே காரணம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தும் டெல்லி போலீஸ் கலவரத்தை தடுக்க தவறியதாக உளவுத் துறை தெரிவிக்கிறது. இந்த குற்றச்சாட்டை டெல்லி போலீஸ் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Delhi Police was sent so many alerts on Sunday by warning possible violence in North East Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X