டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெளுத்து கட்டப் போகும் கனமழை

Google Oneindia Tamil News

டெல்லி: வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இன்று முதல் ஜூலை 21 வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் மத்திய - பிராந்திய வானிலைய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் மத்திய - பிராந்திய வானிலைய ஆய்வு மையத்தின் அறிவிக்கை:

பருவமழைக்கால காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வழக்கமான அமைவிடத்தைக் காட்டிலும் தெற்காக நிலவுகிறது. ஜூலை 18 முதல் அது வடக்கு நோக்கி படிப்படியாக நகர்ந்து இயமலைப் பகுதிக்கு செல்லக்கூடும்.

Intense Rainfall spell over Northern and North Eastern Parts

மேலும், வங்காள விரிகுடாவில் இருந்து தெற்கு நோக்கிய, தென் மேற்கு நோக்கிய ஈரப்பதமான காற்று வடகிழக்கு, கிழக்கு இந்தியாவை ஒட்டிய பகுதிகள் மற்றும் வடமேற்கு இந்தியாவில் அரபிக் கடலில் குறைவான வளிமண்டல நிலையில் சேருவது ஜூலை 18இல் இருந்து தொடங்கலாம்.

மேலே குறிப்பிட்ட சாதகமான வானிலை சூழ்நிலைகள் காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் முறையே ஜூலை 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் மழைப் பொழிவு பரவலாகவும், தீவிரமானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது. ஓரளவுக்கு பரவலானது முதல் பரவலான நிலை என குறிப்பிடும் அளவு வரையில் மழைப் பொழிவு பின்வரும் வகையில் இருக்கும்.

கொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் இயக்கமாக மாற்ற முயற்சித்து வருகிறோம்: ஐநாவில் மோடிகொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் இயக்கமாக மாற்ற முயற்சித்து வருகிறோம்: ஐநாவில் மோடி

ஜூலை 18-20 காலகட்டத்தில் வடமேற்கு இந்தியாவில் கனமானது முதல் மிக கனமானது வரையில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 18-21 காலகட்டத்தில் இது மாதிரி மழை இருக்க வாய்ப்பு உள்ளது.

மேற்கு வங்கம் இமயமலைப் பகுதியை ஒட்டிய பகுதிகள், சிக்கிம் மற்றும் அசாம், மேகாலயா பகுதிகளில் ஜூலை 19 - 21 காலகட்டத்தில் தீவிர கனமழை ஆங்காங்கே பெய்ய வாய்ப்புள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பகுதியில் ஜூலை 19-21 காலக்கட்டத்தில் இதுபோன்ற மழைப் பொழிவு இருக்கலாம். இவ்வாறு வானிலை ஆராய்ச்சி மைய அறிக்கை தெரிவிக்கிறது.

English summary
According to the National Weather Forecasting Centre/Regional Meteorological Centre, New Delhi of the India Meteorological Department, rainfall distribution & intensity is very likely to increase over the northern and northeastern parts of the country from 18th& 19th July respectively.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X