டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா, பிரான்ஸுக்கு இன்று முதல் விமான சேவை: மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜூலை 17-ந் தேதி முதல் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவமாடியதால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்தியாவில் மார்ச் 23-ந் தேதி முதல் அனைத்து விமானப் போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டன.

International flights to US, France set to resume from tomorrow

இதன்பின்னர் உலக நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க மட்டும் சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டன. பின்னர் முதல் கட்டமாக உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டன.

தற்போது இந்தியாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அமெரிக்கா, பிரான்ஸுக்கு நாளை முதல் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியிடமிருந்து திடீரென ஒரு தமிழ் ட்வீட்.. திருக்குறள் பற்றி புகழாரம்பிரதமர் மோடியிடமிருந்து திடீரென ஒரு தமிழ் ட்வீட்.. திருக்குறள் பற்றி புகழாரம்

மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி இது குறித்து கூறியதாவது: டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் பாரீஸ் நகரங்களுக்கு ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 1-ந் தேதி வரை 28 விமான சேவைகள் இயக்கப்பட உள்ளது. ஜூலை 17 முதல் 31-ந் தேதி வரை அமெரிக்கா 18 விமான சேவைகளை இயக்க உள்ளது.

இது ஒரு இடைக்கால நடவடிக்கைதான். இதேபோல் இந்தியாவுக்கு விமான சேவைகளை தொடங்குவது குறித்து ஜெர்மனியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.

English summary
Union Civil Aviation Minister Hardeep Singh Puri said that international flights resume from Tomorrow to US and France.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X