• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

22 இந்திய மொழிகளில் ட்வீட் வெளியிட்டு தாய்மொழி தினத்தை கொண்டாடிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

|

டெல்லி: உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு 22 இந்திய மொழிகளில் ட்வீட் வெளியிட்டு தாய்மொழி தினத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பாக கொண்டாடினார்.

இது தொடர்பாக மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாய் மொழியை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் குறித்து 24 பிராந்திய செய்திதாள்களில் கட்டுரை எழுதியும், 22 இந்திய மொழிகளில் ட்வீட் வெளியிட்டும் சர்வதேச தாய் மொழி தினத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனிச்சிறப்பான முறையில் கொண்டாடினார்.

International Mother Language Day: Vice President Venkaiah Naidu tweets in 22 Indian languages

தாய் மொழிகளை ஊக்குவிப்பதில் முன்னோடியான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், '' மொழி பன்முகத்தன்மை நமது நாகரீகத்தின் அடிப்படைத் தூண்களுள் ஒன்றாக எப்போதும் விளங்குகிறது. தகவல் தொடர்புக்கு மட்டுமல்லாமல், நமது தாய்மொழிகள் பாரம்பரியத்துடன் நம்மை இணைப்பதுடன் சமூக கலாச்சார அடையாளத்தையும் வரையறுக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பக் கல்வி முதல் ஆளுகை வரை தாய் மொழியின் பயன்பாட்டை அனைத்து நிலைகளிலும் நாம் ஊக்குவிக்க வேண்டும் என அழைப்பு விடுத்த துணை ஜனாதிபதி '' நமது சிந்தனைகளையும், கருத்துக்களையும் தாய்மொழியின் வாயிலாக வெளிப்படுத்தப்படுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

International Mother Language Day: Vice President Venkaiah Naidu tweets in 22 Indian languages

வெங்கையா நாயுடு தனது ட்வீட் பதிவுகளை தெலுங்கு, தமிழ், இந்தி, குஜராத்தி, காஷ்மீர், கொங்கனி, மராத்தி, ஒடியா, உருது, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, நேபாளி, அசாமி, பெங்காலி, மணிப்பூரி, போடோ, சாந்தாலி, மைத்லி, டோக்ரி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளார்.

தாய்மொழி நாள்: தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை இந்திய அரசின் அலுவல் மொழியாக்கிட உறுதியேற்போம்-ஸ்டாலின்

வெங்கையா நாயுடுவின் கட்டுரை டைம்ஸ் ஆப் இந்தியா (ஆங்கிலம்) மற்றும் தைனிக் ஜாக்ரன் (இந்தி), ஈநாடு (தெலுங்கு), தினத் தந்தி (தமிழ்), லோக்மத் (மராத்தி), சமாஜ் (ஒடியா), சியாசாத் (உருது), ஆதாப் தெலுங்கானா (உருது), அசோமியா பிரதிதீன் (அசாமி), நவ் பாரத் டைம்ஸ் (மைதிலி), மாத்ருபூமி (மலையாளம்), திவ்யா பாஸ்கர் (குஜராத்தி), பார்தமான் (பெங்காலி), பங்கர் பூயின் (கொங்கனி), ஹயென்னி ராடாப் (போடோ), சந்தால் எக்ஸ்பிரஸ் (சாந்தாலி), பேலா (நேபாளி), ஹம்ரோ வர்தா (நேபாளி), தைனிக் மிர்மேரி (நேபாளி), ஹம்ரோ பிரஜா சக்தி (நேபாளி), இந்து (சிந்தி), ஜோடி டோக்ரி (டோக்ரி), டெய்லி கஹ்வத் (காஷ்மீரி), தினசரி சங்கர்மல் (காஷ்மீரி) ஆகிய 24 இந்திய மொழி செய்தித்தாள்களில் வெளி வந்துள்ளன.

சர்வதேச தாய்மொழி தினத்தை கொண்டாட, மத்திய கல்வித்துறை அமைச்சகம் மற்றும் கலாச்சாரத்துறை இணைந்து நடத்திய இணைய வழி கருத்தரங்கிலும் வெங்கையா நாயுடு காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். ஐதராபாத் ஸ்வர்ண பாரத் அறக்கட்டளை நடத்திய நிகழ்ச்சியிலும் அவர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். வட அமெரிக்க தெலுங்கு சங்கம் நடத்தும் 'மாத்ருபாஷோபவ' நிகழ்ச்சியிலும் அவர் காணொலி காட்சி மூலம் பங்கேற்கவுள்ளார்.

இதற்கு முன்பாக, கடந்த பிப்ரவரி 16-ந் தேதி அன்று நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தாய் மொழியை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
English summary
The Vice President Venkaiah Naidu celebrated the International Mother Language Day today in a unique manner by tweeting in 22 Indian languages.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X