உத்தரகண்ட் சுரங்க கோயிலுக்கு திடீரென போய்.. சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் செய்த சம்பவம்..நெகிழ்ச்சி
டெல்லி: சர்வதேச சுரங்கப்பாதை நிபுணரான அர்னால்ட் டிக்ஸ், உத்தரகண்டின் சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக வெளியே உள்ள கோவிலில் பிரார்த்தனை செய்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது.

அதனுள் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கி உள்ளார்கள். அவர்களை மீட்கும் பணி கடந்த 177 நாட்களாக இரவு பகலாக நடந்து வருகிறது. தமிழகத்தின் நாமக்கல்லைச் சேர்ந்த நிறுவனம் தான் தண்ணீர் உணவு போன்றவற்றை அனுப்ப ஏற்பாடு செய்து கொடுத்தது,
மீட்புப் பணியின் 16-வது நாளான நேற்று இயந்திரம் மூலம் இடிபாடுகளைத் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி நடந்தது. அந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், விபத்தில் உள்ளே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. செங்குத்தாக துளையிடும் பணி நீண்ட நாட்களாக நடந்து வந்த நிலையில் அந்த பணி முடிவடைந்ததும், தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வர வசதியாக 6 இன்சில் நீண்ட குழாயும் பதிக்கப்பட்டுள்ளது
உத்தரகண்டின் சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்கள் வெளியே வர இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில், சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதைக்கு வெளியே உள்ள கோவிலில் 41 பேரின் பாதுகாப்பிற்காக கடவுளின் முன் வேண்டி மனமுறுகி பிரார்த்தனை செய்த வீடியோ வெளியாகி உள்ளது.
VIDEO | Uttarkarshi tunnel collapse UPDATE: International tunneling expert Arnold Dix offered prayers at a temple outside Silkyara tunnel for safety of trapped workers earlier today.#UttarakhandTunnelRescue pic.twitter.com/FFz0H1Z9n2
— Press Trust of India (@PTI_News) November 28, 2023
முன்னாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், பாபா பௌக் நாக் கருணை, கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை, அனைத்து மீட்புக் குழுவினரின் அயராத உழைப்பு ஆகியவற்றால், சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வருவதற்காக சுரங்கப்பாதையில் குழாய்கள் பதிக்கும் பணி முடிவுக்கு வந்திருக்கிறது. அனைத்து தொழிலாளர் சகோதரர்களும் விரைவில் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.
சுரங்கப்பாதைக்கு வெளியே ஆம்புலன்ஸ்கள், ஸ்ட்ரெச்சர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்களும் தயாராக இருக்கிறார்கள். சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டுள்ள 41 தொழிலாளர்களையும் பத்திரமாக வெளியே மீட்கப்பட்ட உடனேயே, முதல் கட்டமாக அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்யப்படுவார்கள், பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications