டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பல்வேறு மொழிகளில் யோகா கற்றுத்தர மொபைல் செயலி M-Yoga App வெளியிடப்படும்: பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் பல்வேறு மொழிகளில் யோகா கற்றுத்தரும் வகையிலான மொபைல் செயலியான M-Yoga App விரைவில் வெளியிடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

International Yoga Day: PM Modi announces launch of M-Yoga App

7-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதல் மத்திய அமைச்சர்கள் பலரும் இன்று யோகா நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று சிறப்புரையாற்றினார். இந்த உரையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. உலக நாடுகளின் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது என்றார்.

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ4 லட்சம் இழப்பீடு வழங்க சாத்தியமே இல்லை- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுகொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ4 லட்சம் இழப்பீடு வழங்க சாத்தியமே இல்லை- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

மேலும் நோய்நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளையும் தமது உரையில் பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார். அத்துடன் உலகின் பல்வேறு மொழிகளில் யோகா கற்றுத்தரும் வகையில் மொபைல் செயலியான M-Yoga App விரைவில் வெளியிடப்படும் என்றார் பிரதமர் மோடி.

உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து யோகா கற்பதற்கான இந்த செயலி உருவாக்கப்படும்; உலகின் பல நாட்டவரும் யோகாவை கற்கும் வகையில் பல்வேறு மொழிகளில் இந்த செயலியில் வீடியோக்கள் இடம்பெறும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

English summary
PM Modi said that India will launch M-Yoga mobile application which will be available to the world in several languages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X