டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி ஈடி கையில்தான் எல்லாம்.. களமிறங்கிய நிர்மலா.. ப.சிக்கு காத்திருக்கும் ஹாலி-டே அதிர்ச்சி!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை நிறைய ஆதாரங்களை திரட்டி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரத்தின் கைது பின்னணி என்ன?- வீடியோ

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை நிறைய ஆதாரங்களை திரட்டி வருகிறது. மத்திய நிதித்துறைக்கு கீழ்தான் இந்த அமலாக்கத்துறை இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். 40க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரம் வீட்டிற்குள் புகுந்து அவரை கைது செய்தனர்.

    இதையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். அவருக்கு இன்று நீதிமன்றம் பெயில் வழங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    என்ன வழக்கு

    என்ன வழக்கு

    இந்த வழக்கில் தற்போது சிபிஐதான் ப. சிதம்பரத்தை கைது செய்து இருக்கிறது. ஆனால் சிபிஐ வசம் சிதம்பரத்திற்கு எதிராக சரியான ஆதாரங்கள் இல்லை. அவர் மீது எப்ஐஆர் கூட பதியப்படவில்லை. இதனால் சிபிஐ இந்த வழக்கில் குறிப்பிட்ட புள்ளிக்கு மேல் ப. சிதம்பரத்திற்கு எதிராக காய் நகர்த்த முடியாது.

    பெயில் கிடைக்கும்

    பெயில் கிடைக்கும்

    இதனால் இன்று பெரும்பாலும் ப. சிதம்பரம் பெயில் வாங்கிவிடுவார் என்று கூறுகிறார்கள். கண்டிப்பாக எப்படியாவது பெயில் வாங்கி அவர் மாலையே வெளியே வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த பெயில் பெரும்பாலும் நிபந்தனையுடன் இருக்கும். வெளிநாடு செல்ல முடியாது.

    அமலாக்கத்துறை தீவிரம்

    அமலாக்கத்துறை தீவிரம்

    இந்த நிலையில்தான் தற்போது அமலாக்கத்துறை தீவிரமாக சிதம்பரம் குறித்த கோப்புகளை சேகரித்து வருகிறது. இதற்காக அதிகாரிகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முடுக்கிவிட்டுள்ளார். நேற்று முதல்நாள் மாலையில் இருந்தே ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை மிக தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

    நிர்மலா சீதாராமன் கெடுபிடி

    நிர்மலா சீதாராமன் கெடுபிடி

    ப. சிதம்பரத்திற்கு எதிராக மிக முக்கியமான ஆதாரங்களை திரட்ட வேண்டும். அவரை விசாரணை காவலில் எடுக்கும் அளவிற்கு ஆதாரங்களை திரட்ட வேண்டும் என்று அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக நிர்மலா சீதாராமன் அமலாக்கத்துறையில் உள்ள முக்கிய அதிகாரிங்களை களமிறக்கி உள்ளார் என்று கூறுகிறார்கள்.

    இல்லை

    இல்லை

    அதேபோல் ப. சிதம்பரம் வெளியே வந்தால் அவரை இன்று கைது செய்ய மாட்டார்கள். நாளை மாலைதான் பெரும்பாலும் கைது செய்வார்கள். நாளை வெள்ளிக்கிழமை என்பதால், இந்த வழக்கில் திங்கள் வரை பெயில் வாங்க முடியாது. அவர் இரண்டு நாட்கள் விசாரணை அதிகாரிகளின் கஸ்டடியில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

    விடுமுறை அதிர்ச்சி

    விடுமுறை அதிர்ச்சி

    இதுதான் தற்போது ப .சிதம்பரத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தால் எங்கும் தலைமறைவாகவும் முடியாது. இதனால் நாளை மீண்டும் அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்ய வாய்ப்புள்ளது. கஸ்டடியில் விசாரணை செய்தால்தான் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படும் என்று அமலாக்கத்துறை தீவிரமாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Inx Media Case: ED started collecting documents against P Chidambaram, may arrest him tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X