டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் ப சிதம்பரம்.. உற்சாக வரவேற்பு

Google Oneindia Tamil News

டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் புதன்கிழமை இரவு விடுவிக்கப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

Newest First Oldest First
8:19 PM, 4 Dec

காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வந்தார். டெல்லி திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் ப சிதம்பரம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் ப சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தது. ஜாமீன் அளித்ததையடுத்து திகார் சிறையில் இருந்து ப சிதம்பரம் விடுவிக்கப்பட்டார்.
7:24 PM, 4 Dec

ப சிதம்பரத்தை வரவேற்க டெல்லி திஹார் சிறைக்கு வந்தார் கார்த்தி சிதம்பரம்
6:15 PM, 4 Dec

சிறையில் இருந்து வெளியே வந்ததும் சோனியாவை என் தந்தை ப.சிதம்பரம் சந்திப்பார்- கார்த்தி சிதம்பரம்
5:09 PM, 4 Dec

ப.சிதம்பரத்தை வரவேற்க டெல்லி திகார் சிறை முன் குவிந்த காங்கிரஸ் நிர்வாகிகள்
4:44 PM, 4 Dec

திகார் சிறையில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் விடுதலையாகிறார் ப. சிதம்பரம்
3:26 PM, 4 Dec

திகார் சிறையில் இருந்து விடுதலையான பின் சோனியாவை சந்திக்கிறார் ப.சிதம்பரம்
2:13 PM, 4 Dec

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நாளை ப.சிதம்பரம் பங்கேற்பார்- கார்த்தி சிதம்பரம்
2:10 PM, 4 Dec

திகார் சிறையில் இருந்து விடுதலையாகும் ப.சிதம்பரத்துக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கிறது காங்கிரஸ்
2:10 PM, 4 Dec

சிதம்பரத்துக்கு 2 நபர்கள் ஜாமீன் உத்தரவாதம் அளித்தனர்
2:10 PM, 4 Dec

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப் படி ரூ2 லட்சம் பிணைத்தொகை சிபிஐ நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.
2:07 PM, 4 Dec

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் சமர்ப்பிக்கப்பட்டன
11:09 AM, 4 Dec

ப்பூ.. 106 நாட்கள் கழித்து ப. சிதம்பரம் ஜாமீனில் விடுதலை- ட்விட்டரில் கார்த்தி சிதம்பரம்
11:09 AM, 4 Dec

ரூ2 லட்சம் பிணை அடிப்படையில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தது உச்சநீதிமன்றம்
10:49 AM, 4 Dec

ஐ.என்.எக்ஸ் வழக்கில் சாட்சிகளை கலைக்க சிதம்பரம் முயற்சிக்கக் கூடாது- உச்சநீதிமன்றம்
10:49 AM, 4 Dec

ஐ.என்.எக்ஸ் வழக்கு குறித்து சிதம்பரம் பத்திரிகைகளில் பேட்டி அளிக்கவும் அறிக்கைகள் வெளியிடவும் கூடாது- உச்சநீதிமன்றம்
10:47 AM, 4 Dec

நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் ப. சிதம்பரம் வெளிநாடு செல்லக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
10:47 AM, 4 Dec

நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு இன்று பிற்பகல் திகார் சிறையில் இருந்து விடுதலையாகிறார் சிதம்பரம்
10:41 AM, 4 Dec

ஐஎன்எக்ஸ்: ப. சிதம்பரத்திற்கு ஜாமீன்
10:40 AM, 4 Dec

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: நீதிபதி போபண்ணா தீர்ப்பை வாசித்து வருகிறார்
10:40 AM, 4 Dec

ஆகஸ்ட் 21-ந் தேதி முதல் 106 நாட்களாக டெல்லி திகார் சிறையில் உள்ளார் ப. சிதம்பரம்
10:26 AM, 4 Dec

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு வருகை. ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் வருகை .
9:30 AM, 4 Dec

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிறைக்கு சென்று 100 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிதம்பரம் கைதானார். சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள். ஆனால் அமலாக்கத்துறை இவரை உடனே கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்திற்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.
9:27 AM, 4 Dec

கடந்த ஒரு மாதமாக ப. சிதம்பரம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தொடர்ந்து டெல்லி ஹைகோர்ட் மறுத்தது. நவம்பர் 14ம் தேதி டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சுரேஷ் கெய்த் இந்த தீர்ப்பை வழங்கினார். இதற்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
9:26 AM, 4 Dec

உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி மற்றும் நீதிபதிகள் ஏ எஸ் போபன்னா, ஹிரிஷிகேஷ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கும்.
9:26 AM, 4 Dec

ப.சிதம்பரம் சார்பாக வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்கள். அமலாக்கத்துறை சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார்.
8:44 AM, 4 Dec

சிதம்பரம் வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் ரூ3.5 கோடி லஞ்சம் என பதிவு; குற்றப்பத்திரிகையில் ரூ9.96 லஞ்சம் என பதிவு
7:58 AM, 4 Dec

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டது
7:58 AM, 4 Dec

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 100 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார் சிதம்பரம்
7:58 AM, 4 Dec

சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வருகிறார்.
7:58 AM, 4 Dec

சிதம்பரத்துக்கு ஜாமீன் தந்தால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார் என்பது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் வாதம்
READ MORE

INX Media case: SC to deliver verdict on Chidambaram bail plea
English summary
The Supreme Court will pronounce its verdict on former Union minister P Chidambaram’s bail plea in the INX Media case lodged by the Enforcement Directorate on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X