டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டை சீரழித்துவிட்டார்கள்.. கடவுள்தான் நம்மை காக்க வேண்டும்.. ப. சிதம்பரம் பரபரப்பு பேட்டி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Govt turned out to be incompetent manager of economy P Chidambaram

    டெல்லி: பாஜகவின் திட்டங்கள் மோசமாக இருக்கிறது.பாஜகவின் திட்டங்கள் இதுதான் என்றால் கடவுள்தான் மக்களை காக்க வேண்டும், என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.

    இந்தியாவில் மிக மோசமான பொருளாதார சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தியாவின் ஜிடிபி ஒவ்வொரு காலாண்டிற்கும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

    இந்த நிலையில் இந்த பொருளாதார சூழ்நிலை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். நேற்று திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

    நிர்மலா வெங்காயம் சாப்பிடமாட்டாராம்.. அப்ப பட்டர் புரூட்டையா சாப்பிடுகிறார்?.. ப.சி. பொளேர் கேள்வி!நிர்மலா வெங்காயம் சாப்பிடமாட்டாராம்.. அப்ப பட்டர் புரூட்டையா சாப்பிடுகிறார்?.. ப.சி. பொளேர் கேள்வி!

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    அவர் தனது பேட்டியில், இந்தியாவின் ஜிடிபி 5%யை அடைந்துள்ளது. சொன்னால் நம்புங்கள் நம்முடைய ஜிடிபி இதை விட மோசமான நிலையை அடையும். ஆம் 5%ஐ விட இது மோசமாக குறையும். உண்மையான ஜிடிபி 1.5% என்பதுதான் உண்மை. அதை அரசு மறைக்கிறது.

    வருகை

    வருகை

    மத்தியில் பாஜக அரசு வந்த பிறகு மக்களின் வறுமை அதிகரித்து விட்டது. பாஜகவின் திட்டங்கள் மோசமாக இருக்கிறது.பாஜகவின் திட்டங்கள் இதுதான் என்றால் கடவுள்தான் மக்களை காக்க வேண்டும். கடவுள்தான் மக்களையும், நாட்டையும் காக்க வேண்டும்.

    மீடியா

    மீடியா

    அரசை நினைத்து மீடியாக்களும் பயப்படுகிறது.நாங்கள் உங்கள் பக்கத்தை படிக்கிறோம், ஆனால் அதில் உண்மை இல்லை.நீங்கள் இப்படி பயப்பட கூடாது.இன்னா செய்தாரை ஒறுத்தல் என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

    அரசு நல்ல முடிவு

    அரசு நல்ல முடிவு

    அரசு நல்ல முடிவுகளை எடுக்கவில்லை: பழி வாங்கும் நடவடிக்கை மட்டுமே எடுக்கிறது. அவர்களை விட நான் நல்ல மனிதன்.பிரதமர் மோடி அமைதி காப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மிக மோசமான பொருளாதார நிலை நிலவி வரும் நிலையில் மோடி அமைதி காக்கிறார்.

    என்ன சூழ்நிலை

    என்ன சூழ்நிலை

    தற்போது நிலவும் சூழ்நிலை அரசு செய்த தவறு.அரசு ஏற்படுத்திய பேரழிவுதான் இது. இதற்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.எங்களிடம் நிறைய திட்டங்கள் இருக்கிறது: ஆனால் அவர்கள் நாங்கள் பேசுவதை கேட்க மாட்டார்கள் என்று ப. சிதம்பரம் கூறினார்.

    English summary
    God Save Us, Economic slowdown is a man-made catastrophe says P Chidambaram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X