டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. திகார் சிறையில் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு

Google Oneindia Tamil News

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ப சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி வழங்கியதை அடுத்து சிறையில் உள்ள ப சிதம்பரத்திடம் அலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தியது

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் டெல்லி உள்ள திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

INX media money laundering case : ED officials on Tihar Jail, to interrogate Congress leader P Chidambaram

இந்த வழக்கில் தன்னை விடுவிக்க கோரி ப சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இதனிடையே டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.

இது தொடர்பாக நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், " சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் இன்று காலை 8.30 மணிக்கு மூன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று விசாரணை நடத்தாம். தேவை ஏற்பட்டால் ப சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யலாம். அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு விசாரணைக்கு தேவையான வசதிகளை டெல்லி திகார் சிறை காவல் கண்காணிப்பாளர் செய்து தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி இன்று காலை 8.30மணிக்கு டெல்லி திகார் சிறைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் ப சிதம்பரத்திடம் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் விசாரணை நடத்தினர். சற்றுமுன்பாக சிதம்பரத்திடம் விசாரணை நிறைவு பெற்றது.

English summary
Enforcement Directorate (ED) officials on Tihar Jail to interrogate Congress leader P Chidambaram in INX media money laundering case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X