டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திரும்பி வந்த ஒரே நாளில் தெறிக்க விடும் ப.சிதம்பரம்.. பொருளாதார மந்த நிலை குறித்து அதிரடி பேட்டி!

திகார் சிறையில் இருந்து வெளியே வந்து இருக்கும் ப. சிதம்பரம் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 05-12-2019 | Morning News | oneindia tamil

    டெல்லி: பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. பொருளாதார பிரச்சனை என்ன என்பதையே பாஜக அரசு புரிந்து கொள்ளவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருந்த ப. சிதம்பரம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று மாலை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன் மூலம் 106 நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இவர் சிறைக்கு சென்ற அதே நேரத்தில்தான் இந்தியாவின் பொருளாதாரமும் மிக மோசமான நிலையை அடைந்தது. இந்தியாவின் இரண்டு காலாண்டு ஜிடிபி மிக மோசமான சரிவை சந்தித்தது. அதேபோல் ஆட்டோமொபைல் துறை பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.

    என்ன செஞ்சு வச்சு இருக்கீங்க.. மக்கள் அரசை பார்த்து பயப்படுறாங்க..பிரஸ் மீட்டில் கொதித்த ப.சி! என்ன செஞ்சு வச்சு இருக்கீங்க.. மக்கள் அரசை பார்த்து பயப்படுறாங்க..பிரஸ் மீட்டில் கொதித்த ப.சி!

    நிலை

    நிலை

    இந்த நிலையில் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து ப. சிதம்பரம் பேட்டி அளித்தார். அதில், 106 நாட்களுக்கு பின் உங்களுடன் பேசுகிறேன். இங்கு உங்கள் முன்னிலையில் பேசுவது சந்தோசம் அளிக்கிறது. நீதிமன்றம் மீதும் மக்கள் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மிக்க நன்றி. என்னுடைய பிரச்சனை இருக்கட்டும், இப்போது பொருளாதாரம்தான் முக்கியம்.

    மிக மோசம்

    மிக மோசம்

    பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. பொருளாதார பிரச்சனை என்ன என்பதே இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அதனால் பொருளாதார பிரச்சனைக்கு அவர்களால் தீர்வு தர முடியவில்லை. நோயை கண்டறிந்தால்தான் மருந்து தர முடியும்.

    என்ன நோய்

    என்ன நோய்

    இவர்கள் நோயையே கண்டறிய தவறி விட்டனர். பாஜக அரசால் என்ன பிரச்சனை என்பதையே யூகிக்க முடியவில்லை. மிக மிக மோசமான முடிவுகளை பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. பணமதிப்பிழப்பு, வரி கொள்ளை, மோசமான ஜிடிபியால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

    நல்ல நாள்

    நல்ல நாள்

    நல்ல நாள் வரும் என்று கூறிவிட்டு ஏமாற்றிவிட்டார். எல்லா துறையும் சீரழிந்துவிட்டது மக்கள் அவதிப்படுகிறார்கள் அரசு மட்டும்தான் மக்களிடம் தங்கள் தவறை ஒப்புக்கொள்ளவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ல் இருந்து 5% வரை குறைந்தது எல்லாம் அநியாயம் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    English summary
    Inx Media Case: P Chidambaram to meet the press today after his 106 days jail life.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X