டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே ஒரு பவுலர்.. 1 வருடத்திற்கு பின் மீண்டு வந்த "ஷமி".. களத்திலேயே "சாமி" ஆட்டம்.. செம சாதனை!

Google Oneindia Tamil News

துபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் முகமது ஷமி மிகவும் சிறப்பாக பந்து வீசி சாதனை செய்துள்ளார். பல மாதங்களாக பவுலிங் போடாமல் இருந்தாலும் கூட இவர் தனது பார்மை தக்க வைத்துள்ளார்.

டெல்லி மற்றும் பஞ்சாப்பிற்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 157 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயேஸ் ஐயர் தலைமையிலான அணி கடைசி நேர அதிரடி மூலம் 157 ரன்களை எடுத்தது.

அதன்பின் ஆடிய பஞ்சாப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் மயங்க் அகர்வால் அதிரடியாக ஆடி 89 ரன்களை எடுத்து அணியை மீட்டார். கடைசி ஒரு பாலில் ஒரு ரன் அடிக்க வேண்டும் என்ற நிலையில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 157 ரன்கள் எடுத்து போட்டி டை ஆனது. அதன்பின் சூப்பர் ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே பஞ்சாப் எடுத்து டெல்லியிடம் தோல்வியை தழுவியது.

அவங்க வருவாங்கன்னு நினைக்கலை.. ஸ்டன் ஆன ரசிகர்கள்.. டெல்லி vs பஞ்சாப் போட்டியில் செம டிவிஸ்ட்! அவங்க வருவாங்கன்னு நினைக்கலை.. ஸ்டன் ஆன ரசிகர்கள்.. டெல்லி vs பஞ்சாப் போட்டியில் செம டிவிஸ்ட்!

என்ன ஆறுதல்

என்ன ஆறுதல்

பஞ்சாப் அணியில் தொடக்கத்தில் பெரிய அளவில் வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. வரிசையாக கேஎல் ராகுல், கருண் நாயர், நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல் என்று எல்லோரும் மோசமாக ஆடினார்கள். மயங்கி அகர்வால் மட்டுமே பேட்டிங்கில் கலக்கினார். பஞ்சாப் அணிக்கு பவுலிங்கில் ஷமி ஆறுதல் அளித்தார்.

ஷமி எப்படி

ஷமி எப்படி

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஷமி நன்றாக பந்து வீசினார். இவர் வீசிய 2 மற்றும் 4வது ஓவரில் அடுத்தடுத்து தவான், ஹெட்மேயர், பிரித்வி என்று அவுட்டானார்கள். இதில் தவான் ரன் அவுட்டானார். அதன்பின் 15வது ஓவரில் ஷ்ரேயேஸ் ஐயர் விக்கெட்டை எடுத்தார்.

ஷமி சாதனை

ஷமி சாதனை

லாக்டவுனுக்கு இடையே பல்வேறு வீரர்கள் பார்மை இழந்து உள்ளனர். இப்படி இருக்க உடலை குறைத்து , பிட்டாகி, ஷமி முழு பார்மிற்கு திரும்பி உள்ளார். உலகக் கோப்பை தொடரில் இருந்த அதே பார்மில் ஷமி இருக்கிறார். இந்த போட்டியில் வெறும் 15 ரன்கள் கொடுத்து ஷமி மூன்று விக்கெட் எடுத்தார். இதுதான் ஐபிஎல்லில் அவரின் பெஸ்ட் பவுலிங். இதற்கு முன் 2019ல் மும்பைக்கு எதிராக 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் இவர் எடுத்து இருந்தார்.

பார்ம் இல்லை

பார்ம் இல்லை

இதன் மூலம் ஷமி தனது பார்மை நிரூபித்துள்ளார். இந்திய அணியின் முன்னணி பவுலர்கள் வரிசையாக பார்மை இழந்து வருகிறார்கள். பும்ரா நேற்று நடந்த போட்டியில் சரியாக பந்து வீசவில்லை. பும்ரா மிக மோசமாக பவுலிங் செய்தது விமர்சனங்களை சந்தித்தது. டெத் ஓவர்களில் அவர் சரியாக பந்து வீசவில்லை. நேற்று 4 ஓவர்கள் வீசிய பும்ரா 43 ரன்களை கொடுத்தார். வெறும் 1 விக்கெட்தான் எடுத்தார்.

புவனேஷ்வர் குமார்

புவனேஷ்வர் குமார்

அவரின் ஓவர் முன்பு போல மிகவும் சிறப்பாக இல்லை. அதேபோல் அவரின் யார்க்கரும் அடிக்கும் அளவிற்குதான் இருந்தது. அதேபோல் அவரின் பவுலிங் வேகமும் சரியாக இல்லை. சரியான லெந்தில் அவர் பந்து வீசவில்லை என்றும் புகார் வைக்கப்பட்டது. அதேபோல் இன்னொரு பக்கம் பாண்டியா பவுலிங் போடும் நிலையில் இல்லை.

கடந்த வருடம் எப்படி

கடந்த வருடம் எப்படி

கடந்த வருடமே இன்னொரு இந்திய பவுலர் புவனேஷ்வர் குமார் பார்மை இழந்துவிட்டார். அவரும் இன்னும் முழுமையாக பார்மிற்கு திரும்பவில்லை. அதேபோல் நேற்று பயிற்சியின் போது, இன்னொரு முன்னணி இந்திய பவுலர் மற்றும் டெல்லி வீரர் இஷாந்த் சர்மா காயம் அடைந்தார். இன்று அஸ்வினும் காயம அடைந்தார். இந்த நிலையில் முகமது ஷமி மட்டும் தனது பார்மை தக்க வைத்து நிம்மதி அளிக்கிறார்.

English summary
IPL: Punjab Player Mohammed Shami proved his form in the match against Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X