டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போராடும் டெல்லி போலீசாருக்கு ஆதரவு தந்த ஐபிஎஸ் அதிகாரிகள்.. தீவிரம் அடைந்த விவகாரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியில் போராட்டம் நடத்திய போலீசார்

    டெல்லி: டெல்லியில், வக்கீல்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் போலீசாருக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் ஆதரவு தெரிவித்திருப்பது இந்த விஷயத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

    மூத்த இந்திய போலீஸ் சேவை அதிகாரிகள் (ஐ.பி.எஸ்) ட்விட்டரில் இதுபற்றி கருத்து கூறியுள்ளனர்.

    IPS officers support police protest in Delhi

    மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அஸ்லம் கான் ட்விட்டரில், போலீசார் தாக்கப்படும் வீடியோவை வெளியிட்டு, இதுபற்றி கூறுகையில், "இதற்கு பதில் கருத்து இருக்கிறதா? எந்த ஆதரவும், தலைமையும், இல்லாத காரணத்தினால் காவல்துறையினர் எவ்வளவு காலம்தான் இப்படி அடிவாங்குவார்கள். " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    டெல்லியில் விஸ்வரூபம் எடுக்கும் போலீஸ் போராட்டம்.. போராட்டத்தை கைவிட மறுப்புடெல்லியில் விஸ்வரூபம் எடுக்கும் போலீஸ் போராட்டம்.. போராட்டத்தை கைவிட மறுப்பு

    தங்கள் பணிகளை மீண்டும் தொடங்குமாறு போலீஸ் கமிஷனர் பட்நாயக் வேண்டுகோள் விடுத்தும், அதற்கு செவிசாய்க்க மறுத்த டெல்லி போலீசார், இன்று, தொடர்ந்து தங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

    திஸ் ஹசாரே நீதிமன்றத்தில் மட்டுமின்றி, நேற்று சாகேத் நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களால் கடமையில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதுவும் கூட போலீசாரின் கோபத்திற்கு காரணம்.

    இதனிடையே, ஐபிஎஸ் சங்கம், தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில், போலீஸ் மற்றும் வழக்கறிஞர்கள் இடையேயான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. பொது களத்தில் உள்ள உண்மைகளின் அடிப்படையில் அனைவரும் அதைப் பற்றி ஒரு நியாயமான பார்வையை கைகொள்ள வேண்டும். உடல் ரீதியான தாக்குதல் மற்றும் அவமானங்களுக்கு ஆளான காவல்துறையினருக்கு ஆதரவாக, நாடு தழுவிய அளவில், போலீசார் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள். சட்டத்தை மீறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் கண்டிக்க வேண்டும், யாராக இருந்தாலும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Incident involving police & lawyers unfortunate. All should take a balanced view of it based on facts in public domain. Countrywide, police stands in solidarity with those police personnel subjected to physical assault & humiliation. Condemn all attempts to break law, by anyone, says IPS association.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X