டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியா வந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்.. நாளை மோடியோடு சந்திப்பு.. உற்றுநோக்கும் டிரம்ப்!

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவீத் ஷரீப் இந்தியா வருகை புரிந்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவீத் ஷரீப் இந்தியா வருகை புரிந்துள்ளார். நாளை பிரதமர் மோடியை ஜாவீத் ஷரீப் சந்திக்கிறார்.

ஈரான் - அமெரிக்கா இடையில் நிகழ்ந்து வரும் பிரச்சனை உலக நாடுகளுக்கு இடையிலான சண்டையாக உருவெடுத்துள்ளது. விரைவில் இது உலகப் போராட் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் டிரோன் தாக்குதல் நிகழ்த்திய அமெரிக்கா ஈரான் குவாட்ஸ் படை தளபதி சுலைமானியை கொலை செய்தது.

Iran Foreign Minister Javad Zarif arrives in India: Will meet PM Modi tomorrow

இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் 12 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில்தான் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவீத் ஷரீப் இந்தியா வருகை புரிந்துள்ளார். நாளை பிரதமர் மோடியை ஜாவீத் ஷரீப் சந்திக்கிறார். ஈரான் அமெரிக்கா இடையே சண்டை குறித்து இவர்கள் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் உடனான வர்த்தகத்தை கடந்த வருடமே இந்தியா நிறுத்துவிட்டது. அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக, மிகுந்த யோசனைக்கு பின், இந்தியா ஈரான் உடன் வர்த்தகத்தை முறித்தது. இதனால் கடந்த 7 மாதமாக இந்தியா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது இல்லை.

இதனால் ஈரான் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவுடனான சண்டை காரணமாக ஈரான் பொருளாதாரம் மேலும் சரிந்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையிலான சண்டையில் இந்தியா இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.

இதற்கு இடையில்தான் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவீத் ஷரீப் இந்தியா வருகை புரிந்துள்ளார்.நாளை பிரதமர் மோடியோடு இவர் இரண்டு நாட்டு உறவு குறித்து பேசுவார். இந்த சந்திப்பை அமெரிக்கா கவனமாக உற்றுநோக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Iran Foreign Minister Javad Zarif arrives in India. He will meet Prime Minister Modi tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X