டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியா வருகை தருகிறார் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவித் ஜப்ரி

Google Oneindia Tamil News

டெல்லி: ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவித் ஜப்ரி இன்று 3 நாள் பயணமாக இந்தியா வருகை தருகிறார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவுடனான பதற்றத்தை தணிக்க இந்தியா முயற்சிகள் எடுத்தால் அதை வரவேற்போம் என ஈரான் கூறியிருந்தது.

Iran foreign minister Zarif to arrive India

இந்நிலையில் இன்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஜப்ரி வருகிறார். டெல்லியில் பிரதமர் மோடியை ஜாவித் ஜப்ரி சந்தித்து பேசுகிறார்.

மேலும் டெல்லியில் இன்று தொடங்கும் ரெய்சினா டயலாக் 2020 நிகழ்ச்சியிலும் ஜாவித் ஜப்ரி பங்கேற்கிறார். இதில் ரஷ்யா, ஈரான், ஆஸ்திரேலியா உட்பட 13 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மேலும் 105 நாடுகளின் 180-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

English summary
Iranian Foreign Minister Javad Zarif will arrive in India on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X