டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரயில் டிக்கெட் முன்பதிவு.. புதிய விதிமுறைகள்.. தொந்தரவு இல்லாம பணத்தைத் திரும்பப்பெற இதைசெய்யுங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    ரயில் டிக்கெட் முன்பதிவு.. புதிய விதிமுறைகள்.. !

    டெல்லி: ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய விதிமுறைகள் ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. இந்த விதிமுறையின் படி நீங்கள் முன்பதிவு செய்த ரயில் தாமதமாக சென்று இணை ரயிலை பிடிக்க முடியாமல் போனால் பணத்தை எளிதாக திரும்ப பெறலாம். அதற்கு நீங்கள் உங்கள் பி.என்.ஆர் யை இணைக்க வேண்டியது அவசியம் ஆகும்

    உங்கள் ரயில் பயணத்தை வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) இந்த ஆண்டு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்று நீங்கள் இணைக்கும் ரயில்களில் டிக்கெட் எடுக்கும்போது உங்கள் பிஎன்ஆர் எண்களை இணைப்பது அவசியம் ஆகும்.

    ஒரு குறிப்பிட்ட தேதியில் இரண்டு நிலையங்களுக்கிடையில் நேரடி ரயில் டிக்கெட் கிடைக்காத சந்தர்ப்பங்களில், பயணிகள் இணைக்கும் ரயில்களை முன்பதிவு செய்ய வேண்டிய நிகழ்வுகள் ஏற்படும். அது போன்ற சமயங்களில் உங்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சியின் புதிய பி.என்.ஆர் இணைக்கும் விருப்பம் பயனுள்ளதாக இருக்கும்.

    பி.என்.ஆர்கள்

    பி.என்.ஆர்கள்

    உங்கள் முதல் ரயில் தாமதமாகிவிடும் போது இணைப்பு ரயிலை நீங்கள் தவறவிடுவீர்கள். எனவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது இரண்டு பி.என்.ஆர்களையும் இணைத்திருந்தால் எளிதாக பணத்தை திரும்ப பெறலாம். அதை எப்படி செய்வது என்பதை இங்கே பார்ப்போம்.

     ஐ.ஆர்.சி.டி.சி தளம்

    ஐ.ஆர்.சி.டி.சி தளம்

    1) ஐ.ஆர்.சி.டி.சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ரயில்கள் மெனுவின் கீழ் "பயண முன்பதிவை இணைக்கும்" ("connecting journey booking") விருப்பம் இருக்கும்.

    ரயில்
    கண்டுபிடி

    2) பின்னர், நாம் விரும்பி பயணத்திற்கு ஏற்ற ரயிலைக் தேடி கண்டுபிடிக்க வேண்டும்

    3) பயணிகள் ரயில் பட்டியல் பக்கத்தில் விரும்பிய ரயிலில் கிடைக்கும் இடவசதியை சரிபார்க்க வேண்டும்.

    புக் நவ்

    புக் நவ்

    4) அதன்பிறகு " Book Now" பொத்தானைக் கிளிக் செய்து உங்கள் இணைப்பு பிஎன்ஆர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். குறிப்பு, பயணம் செய்வோர் இரண்டு பி.என்.ஆர்களை இணைக்க ஒரே யூசர் ஐடியில் தான் இரண்டு ரயில்களையும் முன்பதிவு செய்ய வேண்டும்.

    பயண விவரங்கள்

    பயண விவரங்கள்

    5) நீங்கள் கொடுத்த (உள்ளீடு செய்த தகவல்கள்) பி.என்.ஆர்யை ஐ.ஆர்.சி.டி.சி சரிபார்க்கும். அத்துடன் பி.என்.ஆர் பயணத்தை இணைக்க தகுதியுடையதாக இருந்தால், பயணிகளின் விவரங்கள் தானாகவே இருக்கும் என்று ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் தெரிவித்துள்ளது.

    எத்தனை நாள்

    எத்தனை நாள்

    பிரதான பயணத்திற்கும் இணைக்கும் பயணத்திற்கும் உள்ள வேறுபாடு ஐந்து நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது. எதிர் டிக்கெட்டின் பி.என்.ஆரை இணைக்கும் விஷயத்தில், ஐ.ஆர்.சி.டி.சி பயணிகளின் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி அனுப்பி இணைக்கும் பயணத்தை சரிபார்க்கும்.

    கன்பார்ம் டிக்கெட்

    கன்பார்ம் டிக்கெட்

    உறுதிப்படுத்தப்பட்ட அல்லது ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட (confirmed or partly confirmed tickets) டிக்கெட்டுகள் மட்டுமே பி.என்.ஆர்களை இணைக்க அனுமதிக்கப்படுகின்றன.

    போர்டிங் ஸ்டேஷன்

    போர்டிங் ஸ்டேஷன்

    டிக்கெட்டுகள் இரண்டையும் ஓரளவு (partly) ரத்து செய்தால், பி.என்.ஆர் எண்கள் இணைக்கப்படாது. இரண்டு டிக்கெட்டுகளிலும் பெயர், வயது போன்ற பயணிகள் விவரங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பி.என்.ஆர் கள் இணைக்கப்பட்டவுடன், ஐ.ஆர்.டி.சி பயணத்தை மாற்ற அனுமதிக்காது. நீங்கள் பி.என்.ஆர்களை இணைத்தவுடன் போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவதும் அனுமதிக்கப்படாது.

    English summary
    IRCTC launched New train ticket reservation rule: how to Link PNRs for a hassle-free refund. If you miss the connecting train because your first train gets delayed, you can ask for an easy refund
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X