டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கவுண்டர்கள் திறப்பு.. முன் பதிவு தொடங்கியது

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் வரும் ஜுன் 1ம் தேதி 100 ஜோடி ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக நாடுமுழுவதும் 1.70 லட்சம் பொதுச்சேவை மையங்களிலும் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

Recommended Video

    இப்பவே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யலாம்! ஆனால்...

    இதற்கிடையே ரயில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களில் இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கி உள்ளது. குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் மட்டும் டிக்கெட் முன்பதிவு. இன்று முதல் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் முன்பதிவு தொடங்கவில்லை.

    கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கிய மார்ச் 25 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களும் , பொதுச்சேவை மையங்களும் மூடப்பட்டன.

    ஒவ்வொரு கட்டமாக ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்கள் திறப்பு- இன்று முதல் முன்பதிவு தொடக்கம்ஒவ்வொரு கட்டமாக ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்கள் திறப்பு- இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

    பொதுசேவை மையம்

    பொதுசேவை மையம்

    இந்த சூழலில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பேட்டியில் , வெள்ளிக்கிழமை (இன்று) முதல் நாடு முழுவதும் சுமார் 1.7 லட்சம் பொதுச்சேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும், இதனால் கணினிகள் மற்றும் இணையம் கிடைப்பது மிகக் குறைவாக உள்ள அல்லது இல்லாத தொலைதூர கிராமங்களில் உள்ளவர்களும் இந்த சேவையை அணுக முடியும். . "நாங்கள் இந்தியாவை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்," என்று அவர் கூறினார்.

    100 ரயில்கள் இயக்கம்

    100 ரயில்கள் இயக்கம்

    இந்நிலையில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 100 சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, துரந்தோ, சம்ப்ர்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க முடிவு செய்தது. இந்த ரயில்களில் ஏசி பெட்டிகள், ஏசி அல்லாத பெட்டிகளும் இணைக்கப்படும்

    அட்டவணை வெளியிடு

    அட்டவணை வெளியிடு

    தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் போலவே இந்த ரயில்களும் இயக்கப்பட உள்ளது. முக்கிய நகரங்களான மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது. இதற்கான அட்டவணையையும் ரயில்வே நேற்று முன்தினம் வெளியிட்டது

    டிக்கெட் முன்பதிவு

    டிக்கெட் முன்பதிவு

    இந்த 100 ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்றால் தான் இந்த ரயிலில் பயணிக்க முடியும். இந்த 100 ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 10 மணி்க்கு ஐஆர்சிடிசி இணையதளத்தில் நேற்று தொடங்கியது. சுமார் 2 மணி்நேரத்தில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 25 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

    முன்பதிவு இன்று தொடக்கம்

    முன்பதிவு இன்று தொடக்கம்

    இந்த சூழலில் ரயில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களில் இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் மட்டும் டிக்கெட் முன்பதிவு. இன்று முதல் தொடங்கியது. எந்தெந்த ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு மையங்களை திறக்கலாம் என்பதை உள்ளூர் தேவைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப அந்தந்த இடங்கள் மற்றும் நேரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம். எர்ணாகுளம், சென்னை சென்டரல் உள்ளிட்ட குறிப்பிட்ட ரயில் நிலையங்களில்கு குறைந்த பட்ச டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு இன்று தொடங்கியது. சமூக இடைவெளியை பின்பற்ற ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

    English summary
    The Indian Railways open At Select Railway Stations Train Ticket Reservation Counter from today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X