டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேவையா குமாரு.. ஆபாச விளம்பரங்கள் வருவதாக புகார் அளித்தவருக்கு.. ஐஆர்சிடிசி ஷாக் பதில்

Google Oneindia Tamil News

டெல்லி: ஆபாசமான மற்றும் அருவருக்கத்தக்க விளமபரங்கள் வந்ததாக டிக்கெட் புக்கிங் செய்த ஒருவர் அளித்த புகாருக்கு ஐஆர்சிடிசி இணையதளம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் உங்களுடைய பிரௌசிங் கிஸ்ட்ரியை மையமாக வைத்தே விளம்பரங்கள் வந்துள்ளது என தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேசன் என்பதை சுருக்கி ஐஆர்சிடிசி என்ற பெயரில் தான் இந்திய ரயில்வே டிக்கெட் புக்கிங் இணையதளம் செயல்படுகிறது. இந்த தளத்தில் தினசரி லட்சக்கணக்கானோர் டிக்கெட் புக்கிங் செய்து வருகிறார்கள். முன்பை விட இப்போது நவீனமாகி உள்ள ஐஆர்சிடிசி வெப்சைட்டில் கூகுள் விளம்பரங்கள் இருக்கின்றன. ஒரு நாளில் லட்சக்கணக்கானோர் பார்ப்பதால், இதை வைத்தும் வருமானம் ஈட்டி வருகிறது.

IRCTC shock reply to website user, who complaint about ‘obscene and vulgar’ ads

இந்த தளத்தில் இன்று புக்கிங் செய்த போது ஆபாசமான மற்றும் அருவருக்கத்தக்க விளம்பரங்கள் அடிக்கடி வருவதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் ஆனந்த்குமார் என்பவர் ஸ்கிரீன் சாட் எடுத்து டுவிட்டரில் புகார் அளித்து இருந்தார்.

அவர் தனது புகாரை ஐஆர்சிடிசி, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோருக்கு அனுப்பி இருந்தார்.

இந்த புகார் விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பலரும் ரிடுவிட் செய்து பல்வேறு கேள்விகளை ஐஆர்சிடிசி வெப்சைட்டுக்கு எதிராக எழுப்பினர்.

இதற்கு ஐஆர்சிடிசி விளக்கம்அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், "ஐஆர்சிடிசியும் கூகுள் விளம்பர சேவையை பயன்படுத்தி வருகிறது. பயனாளிகளை குறிவைத்து இந்த விளம்பரங்கள் வருகிறது. பயணாளிகள் இதற்கு முன்பாக பார்த்த மற்றும் விஷயங்கள் மற்றும் அவர்களின் தேடுதல் தகவல்கள் (browsing behaviour and history) ஆகியவற்றை மையமாக வைத்தே விளம்பரங்கள் வருகிறது.

இப்படிப்பட்ட விளம்பரங்கள் வரக்கூடாது என்றால் பிரௌசிங் கிஸ்ட்ரியை உடனே டெலிட் செய்ய வேண்டும்.அப்படி செய்தால் இது போன்ற விளம்பரங்களை தவிர்க்கலாம்" என தெரிவித்துள்ளது. இந்த பதிலை கேட்டு நிச்சயம் புகார் அளித்தவர் அதிர்ச்சி அடைந்து இருப்பார் என பலரும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த விளம்பரமும், அதற்கான ஐஆர்சிடியின் பதிலும் தான் டுவிட்டரில் தற்போது டிரெண்டிங்காகி வருகிறது.

English summary
IRCTC shock reply to website user, who complaint about ‘obscene and vulgar’ ads
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X