டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குட்டி நாட்டுக்கு முளைத்த கொம்பு.. இந்தியாவை சீண்டும் நேபாளம்.. சீனாவுக்கு ஏன் இந்த அடாவடி!

லிபு லேக் பகுதியில் இந்தியா சாலை அமைத்தற்கு நேபாள அரசு கண்டனம் தெரிவித்த விவகாரத்தில் சீனாவின் தூண்டுதல் இருப்பதாக சந்தேகிக்ககப்படுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிற்கு எதிராக சுண்டைக்காய் நாடான நேபாளம் குரல் உசத்தியிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. ஆனால் இதன் பின்னணியில் சீனாவின் குசும்புத்தனம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Recommended Video

    Nepal’s New Political Map Claims India’s Territories

    கடந்த சில தினங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கு சண்டை அதிகரிக்க தொடங்கி உள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்துக்கும் - இந்தியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் சீனா படைகளை குவிக்க தொடங்கி உள்ளது.

    அதேபோல் சிக்கிம் - சீனா எல்லையில் சீனா தொடர்ந்து அத்து மீறி வருகிறது. அங்கு சீன விமானங்கள் அடிக்கடி எல்லை மீறி வருவதாக புகார்கள் வைக்கப்படுகிறது. இதனால் இந்திய படைகளும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

    இரக்கமில்லை.. சுவாசிக்க காற்று கேட்டவர்களின் மூச்சையே பறித்து நாள்.. உருக்கமாக டிவிட் செய்த கமல்!இரக்கமில்லை.. சுவாசிக்க காற்று கேட்டவர்களின் மூச்சையே பறித்து நாள்.. உருக்கமாக டிவிட் செய்த கமல்!

     நேபாளத்தின் குசும்பு

    நேபாளத்தின் குசும்பு

    இந்தியா - சீனா- நேபாளம் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் பகுதிதான் லிபு லேக். இந்தப் பகுதி நமது நாட்டின், உத்தரகாண்ட் மாநிலத்துக்குட்பட்டதாகும். இங்கு மே 8ம் தேதி இந்தியா சாலை அமைத்தது. அதாவது உத்தரகாண்ட் மாநிலம் காத்தியபார்க் பகுதியில் இருந்து லிபு லேக் வரை 80 கிமீ பகுதிக்கு சாலை அமைத்தது. நேபாள எல்லையில் இருந்து 5 கிமீ தூரம் வரை இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

     சண்டை வந்தது

    சண்டை வந்தது

    இந்த சாலை காரணமாக தற்போது சண்டை வந்துள்ளது. லிபு லேக் பகுதியை நேபாளம் தனக்கு சொந்தமான பகுதி என்று கடந்த சில மாதங்களாக கூறி வருகிறது. இது எங்களுக்கு சொந்தமான இடம். இந்தியா இதை ஆக்கிரமித்து இருக்கிறது. இந்த இடத்தை மீண்டும் மீட்டு எடுப்போம் என்று கூறி வருகிறது. இது தொடர்பாக நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி தொடங்கி பிரதமர் பிரசாத் சர்மா வரை இந்தியாவிற்கு எதிராக பேசி வருகிறார்கள்.

     இந்திய வைரஸ்

    இந்திய வைரஸ்

    கொரோனா வைரஸை இந்திய வைரஸ் என்று கூட நேபாள நாட்டு பிரதமர் கொழுப்புத்தனமாக அறிவித்தார். அதோடு லிபு லேக், லம்பியாதூரா, காலபாணி ஆகிய பகுதிகளும் நேபாளுக்கு சொந்தமானது. இங்கு இந்தியா ஆக்கிரமித்துள்ளது. இந்த இடங்களை மீட்போம். இந்தியா அங்கு சாலை அமைத்ததை ஏற்க முடியாது என்றும் திமிர்த்தனமாக பேசியுள்ளார்.

     சீனா போடும் திட்டம்

    சீனா போடும் திட்டம்

    நேபாளத்துக்கு திடீரென எப்படி வந்தது இந்த தைரியம் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு பின் சீனாவின் திட்டங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சீனா இந்தியாவிற்கு நெருக்கடி தரும் விதமாக நேபாளத்தைத் தூண்டி விட்டு வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. கொரோனா காரணமாக, அமெரிக்காவை சேர்ந்த பல நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற முயன்று வருகிறது. இந்த நிறுவனங்களை இந்தியா தங்கள் பக்கம் கொண்டு வர முயல்கிறது. இதனால் இந்தியா மீது சீனா கடும் கோபத்தில் இருக்கிறது.

     வேறு என்ன காரணம்

    வேறு என்ன காரணம்

    அதேபோல் இன்னொரு பக்கம் சீனா மீது சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட அமெரிக்கா துரிதமாக உள்ளது. அதற்கு இந்தியாவும் ஆதரவாக உள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்துள்ளது. இதனால் இந்தியா மீது சீனா கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால்தான் நேபாளத்தைத் தூண்டி விட்டு இந்தியாவுக்கு எரிச்சலைக் கொடுக்க சீனா முயல்வதாக கருதப்படுகிறது.

     குட்டி நாடுகள் கொடுக்கும் அழுத்தம்

    குட்டி நாடுகள் கொடுக்கும் அழுத்தம்

    நேரடியாக மோத முடியாததால், பக்கத்து நாடுகளை தூண்டி விட்டு இந்தியாவை எரிச்சலுக்குள்ளாக்குவதே சீனாவின் வேலை. ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை தன் பக்கம் திருப்பி வைத்து பல தலைவலியைக் கொடுத்தது. இப்போது நேபாாளத்தை பயன்படுத்த பார்க்கிறது. இதற்கு இந்தியா கொடுக்கப் போகும் பதிலடியைக் காண அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

    English summary
    China's turning small nation like Nepal against India due to trade war.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X