டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர் திருப்பம்.. பாஜக கூட்டணியில் இணைகிறதா திமுக? ஸ்டாலின் பேட்டியால் வெடித்த சர்ச்சை

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் பாஜகவிற்கு, திமுக ஆதரவு அளிக்குமா?- வீடியோ

    டெல்லி: தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் பாஜகவிற்கு, திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வியை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த ஒரு பேட்டி எழுப்பியுள்ளது.

    லோக்சபா தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த கட்சிக்கு 10 தொகுதிகளையும், வாரி வழங்கியது திமுக.

    இது மட்டுமின்றி, எந்த கட்சியும் முன்மொழிவதற்கு முன்பு, காங்கிரஸ் கட்சியே அவ்வாறு ஒரு வார்த்தை சொல்லாத நிலையிலும் கூட, ராகுல் காந்தி தான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் முதல் நபராக அறிவித்தவர் மு.க.ஸ்டாலின்.

     ராஜிவ் காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினம்.. சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி ராஜிவ் காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினம்.. சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

    ஸ்டாலின் பேட்டி

    ஸ்டாலின் பேட்டி

    இதுமட்டுமின்றி, தேர்தல் பிரச்சாரங்களில், பிரதமர் நரேந்திரமோடியை மிகவும் தாக்கி பேசி வந்ததும் ஸ்டாலின்தான். சாடிஸ்ட் என்றெல்லாம் நரேந்திர மோடியை பகிரங்கமாக குற்றம் சாட்டிப் பேசினார் ஸ்டாலின். ஆனால், அவர் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த ஒரு பேட்டி, திமுக பாஜக பக்கம் சாய்கிறதா என்ற ஐயப்பாட்டை அனுப்பியுள்ளது.

    23ம் தேதி பதில்

    23ம் தேதி பதில்

    சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலினிடம், மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் திமுக அங்கம் வகிக்க வாய்ப்பு உள்ளதா என்று நிருபர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு, பதிலளிக்கிறேன்" என்று தெரிவித்தார். ஸ்டாலினின் இந்த பேட்டி கண்டிப்பாக காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும். இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' இன்று ஸ்டாலின் பேட்டியை விமர்சனம் செய்து கட்டுரை வெளியாகியுள்ளது.

    நமது அம்மா கிண்டல்

    நமது அம்மா கிண்டல்

    அந்தக் கட்டுரையில், மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் அதில் திமுக அங்கம் வகிக்காது. காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தால் மட்டுமே அங்கம் வகிக்கும் என்று தானே ஸ்டாலின் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பிறகு, பதிலளிப்பதாக ஸ்டாலின் கூறியதன் உள்நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே பாஜகவுடன் ஸ்டாலின் தொடர்பில், இருப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறிய கருத்தை நமது அம்மா நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

    மத்தியில் கூட்டாட்சி?

    மத்தியில் கூட்டாட்சி?

    எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும், ஆனால் மத்தியில் பாஜக கூட்டணி தான் பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது போலவே ரிசல்ட் வராமல், மத்தியில் ஆட்சி அமைக்க போதிய அளவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காமல் பாஜக கூட்டணி தவித்தால், அப்போது அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் மத்திய அமைச்சர் பதவியை திமுகவுக்கு பெற்றுத்தர முடியும் என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் சிலர் கருதுவதாக கூறப்படுகிறது. இதுதான் ஸ்டாலின் பேட்டியின் உட்கருத்து என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

    வாஜ்பாய்க்காக ஆதரவு

    வாஜ்பாய்க்காக ஆதரவு

    ஆனால் மோடியை இந்தளவுக்கு விமர்சனம் செய்து விட்டு, பாஜகவுடன், கூட்டணி அமைக்க திமுக தயங்கும் என்பதால், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், நிதின்கட்கரியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து அதன் மூலமாக திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் ஆதரவை பெற்று பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்க முடியும். ஏற்கனவே பாஜகவை காவி கட்சி, பண்டாரங்கள் கட்சி என்று விமர்சனம் செய்த திமுக, வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசை, ஜெயலலிதா கவிழ்த்த பிறகு, அதே பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. ஆட்சியில் அங்கம் வகித்தது.

    நிதின் கட்கரி

    நிதின் கட்கரி

    கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு, வாஜ்பாய் என்ற தனி மனிதருக்காக தான் கூட்டணி வைத்தோம். மற்றபடி பாஜக கொள்கைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று திமுக தலைவராக இருந்த கருணாநிதி அறிவித்தார். இதேபோல இப்போது நிதின் கட்கரியை முன்னிறுத்தினால், அவருக்காகத்தான் பாஜகவுக்கு ஆதரவு என்று, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய முடியும் என்று திமுக நினைக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Is DMK has a plan to support BJP alliance if they don't get magic number of 272? DMK chief M K Stalin's press meet indicating the plan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X