• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஒருபக்கம் 'பிணங்கள்'.. மறுபக்கம் 'சிக்ஸர்கள்'.. நகரமே பற்றி எரிய.. 'ஐபிஎல்' தேவைதானா?

Google Oneindia Tamil News

டெல்லி: 'ரோம் நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த மன்னன்' என்று சொல்லக் கேட்டிருப்போம். இன்று இந்தியா அப்படியொரு நிலையில் இருக்கிறதா? என்பதை மக்கள் தான் யோசிக்க வேண்டும்.

  IPL 2021 நடத்துவோம்! BCCI பிடிவாதம் | OneIndia Tamil

  கொரோனா... கடந்த வருடம் நமக்கு அறிமுகமான பெயர். நாட்டில் இது பரவத் தொடங்கிய போது, அரசு விதித்த முழு ஊரடங்கு உத்தரவை தொடக்கக் காலத்தில் கொண்டாடாதவர்களே இருக்க முடியாது. சமையல் செய்வது, படுத்து தூங்குவது, மணிக் கணக்கில் சினிமா பார்ப்பது, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது என்று விடுமுறைக் காலங்களை அப்படி அனுபவித்த எவரும் அறிந்திருக்க மாட்டார், கொரோனா எனும் கொடியவனின் உண்மையான குணத்தை.

  தமிழக பாவிகளை பாருங்க.. ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் ரூ.20,000-க்கு விற்ற டாக்டர் உள்பட 3 பேர் கைது தமிழக பாவிகளை பாருங்க.. ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் ரூ.20,000-க்கு விற்ற டாக்டர் உள்பட 3 பேர் கைது

  இன்று அதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். சுவாசிக்க ஆக்சிஜன் இன்றி, சிகிச்சைக்கு 'ரெமிடிசிவிர்' மருந்து இன்றி.. இவ்வளவு ஏன்.. பிணங்களை எரிக்க இடமின்றி.. என இப்படியொரு கோர முகம் கொரோனாவுக்கு இருக்கும் என்பதை எவரும் அறியவில்லை.

   மறுபக்கம் சிக்ஸர்கள்

  மறுபக்கம் சிக்ஸர்கள்

  ஒருபக்கம் பிணங்கள் எரிந்து கொண்டிருக்க, மறுபக்கம், கிரிக்கெட் மைதானங்களை இரவிலும் பகலாக்கும் விளக்குகள் தனது ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்க, அந்த வெளிச்சத்தின் நடுவே நடந்து கொண்டிருக்கிறது 'ஐபிஎல்' எனும் இந்தியன் பிரீமியர் லீக். ஒருபக்கம் கொரோனாவால் நாட்டில் நிலவும் இருள் மேகம்.. மறுபக்கம் கூசும் வெளிச்சம். நல்லாயிருக்குல!

   இக்கட்டான நிலை

  இக்கட்டான நிலை

  இன்றைய தேதியில், உலகில் மற்ற எந்த நாடுகளையும் விட, கொரோனாவால் அதிகம் நசுக்கப்பட்டு வரும் நாடு இந்தியா தான். இன்று (ஏப்.30) காலை 8 மணி வரை இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,87,62,976. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 31,70,228. ஒட்டுமொத்த மரணங்களின் எண்ணிக்கை 2,08,330. இந்த இக்கட்டான நிலையில் ஐபிஎல் தேவையா? என்பதே பலரது கேள்வி.

   அச்சத்தில் வீரர்கள்

  அச்சத்தில் வீரர்கள்

  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல்-ல் இருந்து தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறியதை நாம் பார்த்தோம். அதுமட்டுமின்றி, தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தொடரிலிருந்து விலகுவதாக நிதின் மேனன் மற்றும் பால் ரீபில் ஆகிய அம்பயர்களும் வெளியேறிவிட்டனர். இவர்கள் அனைவரின் பயத்துக்கும் காரணம் கொரோனா மட்டுமே. இவர்கள் அனைவருக்கும் ஒருபடி மேலே சென்ற ஆஸி., முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட், 'இப்படியொரு மோசமான நேரத்தில் இந்தியாவிற்கு ஐபிஎல் தேவையா?' என்று வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.

   உங்களுக்கு இது தேவையா?

  உங்களுக்கு இது தேவையா?

  மேலே பட்டியலிட்ட வீரர்கள் அனைவரும், 'முதலில் உயிர்; மற்றதெல்லாம் .....' என்று துணிச்சலாக வெளியேறிவிட்டனர். மற்ற வீரர்களில் பலருக்கும் இதே எண்ணம் இருக்கலாம். ஆனால், பெரும்பாலான நட்சத்திர வீரர்களிடம், நேரடியாகவே 'தொடரை விட்டு வெளியேறிவிட வேண்டாம்' என்று ஐபிஎல் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுவிட்டதாம். அதனால், டாப் வீரர்கள் பலரும் நிலைமையை வெளியே சொல்ல முடியாமல் விளையாடி வருகிறார்கள். குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெற்றோர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டும் 'தல' அசரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

   ஏன் நிறுத்தணும்?

  ஏன் நிறுத்தணும்?

  அதேசமயம், தேசமே இப்படி வேதனைப்பட்டுக் கொண்டிருக்க, அவர்களின் ஒரே ஆறுதலாக ஐபிஎல் இருப்பதாக பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், "பாசிட்டிவிட்டியை பரப்பும் விளையாட்டின் சக்தியை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஐபிஎல் காரணமாக அட்லீஸ்ட் ரசிகர்கள் வீட்டில் இருக்கிறார்கள். இல்லையெனில் அவர்களில் பலர் மாஸ்க் இல்லாமல் வெளியேறுவார்கள். ஐபிஎல் லீக் பொருளாதாரத்திற்கு கணிசமான அளவு உதவுகிறது. அதை அந்த சூழலிலிருந்தும் பார்க்க வேண்டும். இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது, ஐபிஎல் நிறுத்தப்படுவது எவ்வாறு உதவும்?" என்றார்.

   லாஜிக் பேசும் யூத்ஸ்

  லாஜிக் பேசும் யூத்ஸ்

  இந்த அதிகாரியின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது சில இளைஞர்களின் கருத்து. அவர்கள், "எந்த டிவி வைத்தாலும் கொரோனா பற்றி தான் நியூஸ் வருது. ஒருகட்டத்துக்கு மேல் அதை பார்க்க முடியல. பேஸ்புக் டைம்லைன்-யும் கொரோனா அப்டேட்ஸ் தான். நாங்க என்ன பண்றது? யுவன், அனிருத், ரஹ்மான் சாங்ஸை எவ்வளவு நேரம் கேட்பது? வடிவேலு, யோகிபாபு காமெடிகளை எவ்வளவு நேரம் பார்ப்பது? ஸோ, ஐபிஎல்லும் எங்களுக்கு ஒரு ஆறுதலா தான் இருக்கு. குறிப்பாக, அது ஈவ்னிங் டைம்-ல நடக்குறதால, 'கௌசா' , பானிபூரி, போண்டா, பஜ்ஜி-ங்கிற எங்க நொறுக்கு தீனி ஆர்வத்தால வெளியே போறது குறைஞ்சிருக்கு" என்று லாஜிக் பேசுகின்றனர்.

  எது எப்படியோ.. கொரோனாவால் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து, உறவினர்களை இழந்து, நண்பர்களை இழந்து, கடைசியில் உயிரையே இழக்கும் நிலை ஏற்படும் இந்த நேரத்தில், ஐபிஎல் தேவைதானா என்பதை மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.

  English summary
  ipl 2021 really need in corona tragedy in India? - ஐபிஎல்
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X