டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐஎஸ் தீவிரவாதி... டெல்லியில் கைது... வெடிகுண்டுகள் அழிப்பு... உ.பி.க்கு எச்சரிக்கை!!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதையடுத்து, உத்தரப்பிரதேச போலீசாருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு இருக்கும் தீவிரவாதி உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்த அபு யூசுப் என்பது தெரிய வந்துள்ளது.

Recommended Video

    ISIS தீவிரவாதி கைது! Uttar Pradesh on alert!

    இதுகுறித்து உத்தரப்பிரதேச சட்டம் ஒழுங்கு ஏடிஜி பிரசாந்த் குமார் கூறுகையில், 'டெல்லி சிறப்புப் போலீசாரால் வெடிகுண்டுகளுடன் ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அனைத்து போலீசாருக்கும், பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

    IS terrorists arrested in Delhi high alert issued to Uttar Pradesh

    டெல்லியில் தவ்லா கவுன் என்ற இடத்தில் 15 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களுடன் குக்கர் ஒன்றும் தீவிரவாதியிடம் இருந்து கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிபொருட்களை தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் பத்திரமாக சனிக்கிழமை காலை (இன்று) வெடிக்கச் செய்து அழித்தனர்.

    ''லோன் உல்ப் அட்டாக்''.. டெல்லியில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதி பிளான்.. வளைத்து பிடித்த போலீஸ்! ''லோன் உல்ப் அட்டாக்''.. டெல்லியில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதி பிளான்.. வளைத்து பிடித்த போலீஸ்!

    இதையடுத்து உத்தரப்பிரதேச தீவிரவாத எதிர்ப்புப் படையைச் சேர்ந்த போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். லோதி சாலையில் இருக்கும் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, தீவிரவாதிக்கு உதவி வந்தவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    IS terrorists arrested in Delhi high alert issued to Uttar Pradesh
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X