டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுனால் 78,000 உயிரிழப்புகள் தவிர்ப்புன்னீங்களே.. அறிவியல் ஆதாரம் கொடுங்க.. காங். கிடுக்கிப்பிடி

Google Oneindia Tamil News

டெல்லி: எதன் அடிப்படையில் நாட்டில் பொது முடக்கம் காரணமாக 14 முதல் 29 லட்சம் வரையிலான கொரோனா தொற்று தடுக்கப்பட்டுள்ளது, 37,000 முதல் 78,000 வரையிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு இருக்கிறது என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் கொரோனா தாக்கம் மற்றும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து விவாதம் மேற்கொள்ள ராஜ்ய சபாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் உறுப்பினர் மனோஜ் ஜா ''ஜீரோ அவர்'' நோட்டீஸ் அளித்து இருந்தார். (ஜீரோ அவர் என்பது சபை கூடுவதற்கு முன்பு உறுப்பினர்கள் கேட்க விரும்பும் கேள்வியை காலை பத்து மணிக்குள் சபாநாயகரிடம் கொடுத்து அனுமதி பெற வேண்டும்)

Is there any scientific reason for 14-29 lakh cases prevented by lockdown: Congress

இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ''நாட்டில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது, கொரோனாவுக்கான யுத்தம் இன்னும் நீண்ட தொலைவில் இருக்கிறது. தடுப்பதற்கான அனைத்து போதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்பதை அவைக்கு தெரிவிக்கிறேன்.

ஒரு மாதத்தில் தடுப்பு மருந்து... கொரோனா வைரஸ் தானாக மறைந்துவிடும்...டொனால்ட் ட்ரம்ப் ஆருடம்!! ஒரு மாதத்தில் தடுப்பு மருந்து... கொரோனா வைரஸ் தானாக மறைந்துவிடும்...டொனால்ட் ட்ரம்ப் ஆருடம்!!

நாட்டில் பொது முடக்கம் காரணமாக 14 முதல் 29 லட்சம் வரையிலான கொரோனா தொற்று தடுக்கப்பட்டுள்ளது, 37,000 முதல் 78,000 வரையிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு இருக்கிறது'' என்றார்.

எதன் அடிப்படையில் அமைச்சர் இந்த தகவலை அவையில் தெரிவித்துள்ளார். அதற்கான போதிய அறிவியல் ஆதாரங்கள் இருக்கிறதா என்று காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பினார். அப்போது, ''மத்திய அரசின் இந்த முடிவுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை இந்த அவைக்கு அமைச்சர் தெரிவிக்க வேண்டும்'' என்றார்.

English summary
On what basis did govt say 14-29 lakh cases prevented by lockdown: Congress
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X