டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை புத்த பூர்ணிமா.. மேற்கு வங்கம் (அ) வங்கதேச இந்து கோயில்களை குறி வைக்கும் மனிதவெடிகுண்டுகள்

Google Oneindia Tamil News

டெல்லி: மேற்கு வங்கத்தில் மனிதவெடிகுண்டுகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகை அன்று தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு போல் தாக்குதல் நடத்தியதில் 359 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் தமிழகத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது.

டிடிவி தினகரன் தலைமையில்தான் ஆட்சி அமைய வேண்டும்... தங்க தமிழ்ச்செல்வன் உறுதி! டிடிவி தினகரன் தலைமையில்தான் ஆட்சி அமைய வேண்டும்... தங்க தமிழ்ச்செல்வன் உறுதி!

புத்த பூர்ணிமா

புத்த பூர்ணிமா

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை புத்த பூர்ணிமா வடமாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சதி

சதி

இதையொட்டி புத்த கோயில்களில் வழிப்பாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் வங்கதேசம் அல்லது மேற்கு வங்கத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் அல்லது ஜமாதுல் முஜாஹிதீன் வங்கதேசம் என்ற ஜிகாதி அமைப்புகள் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி செய்துள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ரம்ஜான் மாதத்தில் இந்து கோயில்களில் தாக்குதல் நடத்தி ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இலங்கை தாக்குதலுக்கு பிறகு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு

குண்டுவெடிப்பு

இதனால் ஆண் தீவிரவாதிகளை காட்டிலும் பெண் தீவிரவாதிகளை கர்ப்பிணி பக்தர் போல் அனுப்பினால் பாதுகாப்பு சோதனையிலிருந்து தப்பி கூட்டத்தோடு கூட்டமாக கலந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தலாம் என திட்டமிட்டுள்ளது.

English summary
Female bombers of ISIS posing as devotees may commit suicide attack on Buddhist Temples in Bangladesh or West Bengal during the Buddha Purnima, which will be celebrated tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X