டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Ram Janma Bhoomi ; the birth place of Lord Rama : Hindu Side Argue Over

    டெல்லி: இந்து மகாசபா நிலைப்பாட்டில் வேறுபாடு இருக்கிறது என்று, அயோத்தி வழக்கில், சன்னி வக்பு வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவான் தெரிவித்தார்.

    உச்சநீதிமன்றத்தில் ல் முஸ்லீம் கட்சிகளில் ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டாக்டர் ராஜீவ் தவான் இன்று இறுதி வாதத்தை முன்வைத்தார்.

    அவர் கூறுகையில், இந்த வழக்கில் சமர்ப்பிப்பதில் இந்து மகாசபாவில் வேறுபாடுகள் உள்ளன என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதை பாருங்கள்.

    மரபு வழி உரிமை கிடையாது

    மரபு வழி உரிமை கிடையாது

    சன்னி வக்பு வாரியத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதிடுகையில் கூறியதாவது: எதிர்த்தரப்பான, ஹிந்து மகாசபா, அயோத்தி விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டு உள்ளது. அவர்களுக்குள்ளேயே வேறுபாடுகள் உள்ளன. தரம்தாஸ் ராமஜென்ம பூமியின் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பாளர் கிடையாது. அவர் பூஜாரியாகத்தான் செயல்பட்டார். மேலும் வழிபாட்டு உரிமை என்பது தனிப்பட்ட உரிமை சம்பந்தப்பட்டது. இதில் மரபுவழி உரிமையை அளிக்க முடியாது.

    தலைமை நீதிபதி அனுமதி

    தலைமை நீதிபதி அனுமதி

    இந்து மகாசபா கோர்ட்டில் வழங்கிய புத்தகத்தை நான் கிழித்து விட்டதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால் தலைமை நீதிபதியின் அனுமதியோடு தான் எனக்கு வழங்கப்பட்ட புத்தகத்தில் குறிப்பிட்ட அந்த பக்கங்களை கிழித்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதை கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராஜீவ் தவானிடமிருந்த புத்தகத்திலுள்ள காகிதத்தை கிழிக்க அனுமதித்தது தான்தான் என்று தெரிவித்தார்.

    ஜாதி சமூகம்

    ஜாதி சமூகம்

    மேலும் ராஜிவ் தவான் வாதிடுகையில், சுல்தான்கள் ஆட்சி 1206ல்தான் துவங்கியது. சாதி நிறைந்த சமூகத்தில் வாழும் மக்களுக்கு, இஸ்லாம் மிகவும் ஈர்ப்பு கொண்ட ஒரு நம்பிக்கையாக உள்ளது. நீங்கள் இல்லை, இல்லை என்று சொல்வீர்கள். ஆனால் அவர்கள் மதம் மாறினார்கள்.
    இந்தியா ஒரே அரசியல் கொண்ட நாடாக இருந்தது இல்லை. இந்தியாவிற்குள் கூட பல ஆட்சியாளர்களால் இருந்தனர். அந்த மன்னர்களில் பலர் இந்துக்கள். இதற்காக வேறுபாடு பாராட்ட முடியுமா?

    பழைய மாதிரி பாபர் மசூதி

    பழைய மாதிரி பாபர் மசூதி

    1992, டிசம்பர் 5ம் தேதியன்று, பாபர் மசூதி எப்படி இருந்ததோ, அப்படியே மறுபடியும் நிர்மாணிக்க உள்ளோம். இடிக்கப்பட்ட கட்டிடம் எங்களுடையது. அதை புனரமைக்கும் உரிமையும் எங்களுடையது. வேறு யாருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு அவர் வாதிட்டார். அந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Rajeev Dhavan argues: Sultanate began only in 1206. Islam is an extremely attractive faith for people living in a caste-ridden society. You will say no no, they are all converted.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X