டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க வேலையே இது தான்.. பாகிஸ்தானை அசிங்கப்படுத்தி.. இம்ரான்கானை வாயடைக்க வைத்த ஜெய்சங்கர்

Google Oneindia Tamil News

டெல்லி: மேற்கத்திய சக்திகள் சீனாவை கட்டுப்படுத்த இந்தியாவைப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது எனறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்தை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துள்ளார். இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கு இடையே வளர்ந்து வரும் நல்ல நட்புறவை கெடுக்க முயற்சிக்கும் இம்ரான்கானுக்கு வாயடைக்க வைக்கும் அளவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

செய்தி சேனல் ஒன்றுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அளித்த பேட்டியில், மேற்கத்திய நாடுகள் சீனாவை கட்டுப்படுத்த இந்தியாவைப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது. சீனா எப்போதும் பாகிஸ்தான் பக்கம் நிற்க இதுவும் ஒரு முக்கிய காரணம்.அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவுக்கு புவியியல் ரீதியாக நிலப்பரப்பும் மற்றொரு காரணம் என்றார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "இதையெல்லாம் சொல்பவர்கள் - அவர்கள் ஒருவேளை தங்கள் சொந்த வரலாற்றையும், தங்கள் சுய மதிப்பையும் அப்படியே பிரதிபலிக்கிறார்கள். நிச்சயம் அவர்களை போல் அல்ல இந்தியா" என்றார்.

 சீனாவில் புயலை கிளப்பிய 19 வயது ராணுவ வீரரின் கல்லறைப்படம்.. அனல் பறக்கும் விவாதம்.. ஏன் தெரியுமா? சீனாவில் புயலை கிளப்பிய 19 வயது ராணுவ வீரரின் கல்லறைப்படம்.. அனல் பறக்கும் விவாதம்.. ஏன் தெரியுமா?

பினாமி நாடு பாகிஸ்தான்

பினாமி நாடு பாகிஸ்தான்

இந்தியா-அமெரிக்க உறவுகள் பற்றிய இம்ரான் கானின் விளக்கத்திற்கு கடுமையாக பதில் அளித்த ஜெய்சங்கர்,, கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானின் கொள்கையே, ஒரு சக்திவாய்ந்த நாட்டிற்கான பினாமி போல செயல்படுவதைக் குறிக்கிறது. முதலில் அமெரிக்கர்களுக்கும், தற்போது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, சீனாவுக்கும். என பினாமி போல் பாகிஸ்தான் செயல்படுகிறது. அவர் அதை பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.

எங்களுக்கு சுய உணர்வு இருக்கு

எங்களுக்கு சுய உணர்வு இருக்கு

இந்தியா மிகவும் தனித்துவமான இயல்புடைய நாகரிகம் உள்ள நாடு.. எங்கள் வரலாற்றைப் பாருங்கள். மிகவும் கடினமான இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்துள்ளோம். நாங்கள் குறிப்பாக சுதந்திரத்திற்காக மிகப்பெரிய விலை கொடுத்துள்ளோம். . சிலர் ஏதாவது செய்தால், நாமும் அவ்வாறே செய்வோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்தியா அப்படி அல்ல.. தன்னைப் பற்றி ஒரு குறிப்பிட்ட சுய உணர்வைக் கொண்டுள்ளது.

யாரும் எதிரானது அல்ல

யாரும் எதிரானது அல்ல

இந்தியாவுக்கு சொந்தமான ஆளுமை உள்ளது. இந்தியாவுக்கு அதன் சொந்த நலன்கள் உள்ளன. இந்தியாவுக்கு ஒரு தனித்துவமான தன்மை உள்ளது. இது ஒருவருக்கு எதிரானது என்றோ அல்லது எதிர்மறையாக இருக்கிறது என்றோ நிச்சயம் வரையறுக்க முடியாது, "என்று இவ்வாறு கூறினார்.

வர்த்தகத்தில் முரண்பாடு

வர்த்தகத்தில் முரண்பாடு

வர்த்தக மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகளுக்குப் பின்னர் சீனாவும் அமெரிக்காவும் முரண்பட்டு நிற்கின்றன, சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் ஆக்கிரமிப்பு விஷயத்திலும் அமெரிக்கா சீனா மீது கடுமையான நடந்து வருகிறது. அண்மையில் இந்தியாவின் கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தினருடன் இந்திய இராணுவ வீரர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில், அமெரிக்கா பகிரங்கமாக இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. சீனா எல்லையில் படைகளை வாபஸ் பெற மறுப்பதால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

English summary
External affairs minister S Jaishankar’s acerbic counter to Imran Khan’s description of India-US ties alludes to Islamabad’s policy to operate like a proxy for, first for the Americans and now, China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X