டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆர்எஸ்எஸ், சிபிஐயை குறி வைத்து ஐஎஸ் இயக்கம் தாக்குதல் திட்டம்? என்ஐஏ திடுக் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி:ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், சிபிஐ, பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆகியோர் மீது, ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தேசிய விசாரணை முகமையான என்ஐஏ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் அப்துல்லா பாசித், அப்துல் காதிர் ஆகிய இருவர் மீதும், இளைஞர்களை மூளைச் சலவை செய்து, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் அடிப்படையில், தேசிய விசாரணை முகமையான என்ஐஏ, இருவரையும் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி கைது செய்தது. இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், துணை குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் என்ஐஏ தாக்கல் செய்தனர். அதில் அப்துல்லா பாசித், மதின் அஜிஸ் என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அபிநந்தன் காட்டுவது வீரம் அல்ல... என்ன கமல்.. இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க? அபிநந்தன் காட்டுவது வீரம் அல்ல... என்ன கமல்.. இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க?

குற்றப்பத்திரிகை விவரங்கள்

குற்றப்பத்திரிகை விவரங்கள்

அந்த குற்றப்பத்திரிகையில் மேலும் பல புதிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் உள்ள விவரங்கள் வருமாறு:

ஆயுத கொள்முதல்

ஆயுத கொள்முதல்

2017ம் ஆண்டு நவம்பர் , டிசம்பர் மாதங்களில் பாசித்தை தொடர்பு கொண்ட அஜிஸ், பாகிஸ்தானின் ஹுஜைபா என்பவரின் செல்போன் எண் கொடுத்து தொடர்பு கொள்ளச் செய்தார். இருவரும் சேர்ந்து, கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில், பஞ்சாப், டெல்லி, பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளனர்.

நிதி உதவி

நிதி உதவி

அப்போது, இந்தியாவில் தனிமனித தாக்குதல் நடத்துமாறு பாசித்துக்கு ஹுஜைபா அறிவுறுத்தியுள்ளார். அதற்கு தேவைப்படக் கூடிய நிதியை ஏற்பாடு செய்து தருவதாகவும் பாசித்துடன் உறுதியளித்துள்ளார். சொன்னது போல... தாக்குதல் நடத்த வாகனங்கள் வாங்க பாசித்துக்கு நிதியுதவியை ஹுஜைபா அளித்துள்ளார்.

தாக்குதல் திட்டம்?

தாக்குதல் திட்டம்?

இருவரின் திட்டப்படி, அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள், இந்துக்கள் அதிகமாக கூடுமிடம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். தாக்குதலில் ஈடுபட இந்தியாவில் ஐஎஸ் ஆதரவாளர்களை உருவாக்கவும், இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்யவும் பாசித்துக்கு ஹுஜைபா அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் அணு சக்தி வல்லமை கொண்ட நாடுகளா? முடியவே முடியாது என மறுக்கும் சீனாஇந்தியா, பாகிஸ்தான் அணு சக்தி வல்லமை கொண்ட நாடுகளா? முடியவே முடியாது என மறுக்கும் சீனா

வெளியான விவரங்கள்

வெளியான விவரங்கள்

ஆனால், அவ்விரு இளைஞர்களும் டெல்லி சிறப்பு போலீசில் சிக்கியதால் தாக்குதல் குறித்து அனைத்து விவரங்களும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, அப்துல்லா பாசித், கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெல்லி போலீஸார் கைது செய்ய முயன்ற போது தப்பினார். ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி ஹைதராபாத் போலீஸாரால் கைது செய்யப்பட்டார் என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Islamic State sympathizers planning lone wolf attacks to target government employees, security forces, investigating agencies and RSS members. NIA said in a charge sheet filed recently in a Delhi court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X