டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா.. ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாறுகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவை எதிர்த்துப் போராட இந்திய ரயில்வே தனிமைப்படுத்தும் வார்டுகளை ரயில் பெட்டிகளில் அமைத்துள்ளது. வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள காமாக்கியா ரயில் நிலையத்தில் (அசாம்) இப்படி ஒரு ரயில் ரெடியாகியுள்ள காட்சியை படத்தில் பார்க்கலாம்.

Recommended Video

    கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? அதிர்ச்சி ரிப்போர்ட்

    ஒரு கோச்சில் 9 நோயாளிகளுக்கு இடமளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

    Isolation coaches have been prepared by Indian Railways

    மேலும், எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால், மூன்று லட்சம் நோயாளிகளை பராமரிக்க படுக்கை வசதிகளை உருவாக்க ரயில்வே தயாராக உள்ளது.

    வட மத்திய ரயில்வே (என்.சி.ஆர்) பொது மேலாளர் ராஜீவ் சவுத்ரி கூறுகையில், ரயில்வே டெல்லியில் உள்ள கோச்சிங் டிப்போவில், மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, கோச்களை தனிமை வார்டுகளாக மாற்றியது.

    கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரயிலின் ஸ்லீப்பர் கோச், தனிமைப்படுத்தப்படும் வார்டாக மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்தகைய திட்டம் எந்தவொரு அவசரநிலையையும் சந்திக்க நன்கு தயாராக இருக்க நமக்கு உதவும் என்று அவர் கூறினார்.

    அனைத்து ரயில்வே பிரிவுகளும் கோவிட் -19 நோயாளிகளுக்கு தனிமை படுக்கைகளை அமைப்பதற்கான ஒரு வார்டு அல்லது கட்டிடத்தை அடையாளம் கண்டுள்ளன.

    அதேபோல், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) தேவை ஏற்பட்டால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகளிலும் உணவு பரிமாறும் திட்டத்தை உருவாக்கி வருகிறது.

    கொரோனா 3வது ஸ்டேஜை அடைந்தால், நிறைய நோயாளிகளை சமாளிக்க இதுபோன்ற வசதிகள் செய்யப்படுகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க ஜூன் மாதத்திற்குள் 40,000 வென்டிலேட்டர்களை இந்தியா புதிதாக மருத்துவத்துறையில் சேர்க்க உள்ளது.

    கொரோனா வைரஸின் நிலைகள் என்ன? எந்தெந்த நாடுகள் எந்த நிலையில் இருக்கு? கொரோனா வைரஸின் நிலைகள் என்ன? எந்தெந்த நாடுகள் எந்த நிலையில் இருக்கு?

    10,000 வென்டிலேட்டர்களை உருவாக்க பொதுத்துறை நிறுவனத்திடம் கேட்டுள்ளது சுகாதாரத்துறை, மேலும் 30,000 பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்திலிருந்து வரும். வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான எங்கள் முயற்சியில் பங்களிக்க எங்கள் பணியாளர்களுக்கு ஆன்லைன் முறை மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.

    English summary
    Isolation coaches have been prepared by Indian Railways to fight the CoronavirusPandemic; Visuals from Kamakhya Railway Station (Assam) in Northeast Frontier Railway zone. 9 patients can be accommodated in one coach.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X