டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனி இந்தியாவிற்கு கவலையில்லை.. அடிச்சி தூக்கலாம்.. பதிலடிக்கு எந்த நாடு சப்போர்ட் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    இனி இந்தியாவிற்கு கவலையில்லை! உதவிக்கரம் நீட்டும் இஸ்ரேல் - வீடியோ

    டெல்லி: தீவிரவாதத்தை வேறோடு அழிக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக இந்தியாவிற்கு, இஸ்ரேல் நட்புக்கரம் நீட்டியுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை, இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற நிலையில், பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

    அமெரிக்கா ஆதரவு

    அமெரிக்கா ஆதரவு

    அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஏற்கனவே இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் இருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நாங்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் முக்கியமான மற்றொரு ஆதரவும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.

    இஸ்ரேல் ஆதரவு

    இஸ்ரேல் ஆதரவு

    அந்த நாடு இஸ்ரேல். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கான, இஸ்ரேல் தூதர் ரான் மல்கா, நிருபர்களின் கேள்வி ஒன்றுக்கு பளிச்சென இந்த பதிலை அளித்துள்ளார். ரான் மல்கா கூறியதை பாருங்கள்: இந்தியா தன்னை பாதுகாத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைக்கு எந்த எல்லையையும் யாரும் நிர்ணயித்துவிட முடியாது.

    இந்தியா நட்பு

    இந்தியா நட்பு

    இந்தியா இஸ்ரேலின் நெருக்கமான நட்பு நாடு. எங்கள் தோழன் தன்னை பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், இஸ்ரேல் உதவி செய்யும். இந்தியா, இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, உலகம் முழுக்க தீவிரவாதம் மோசமான பிரச்சினையாக மாறியுள்ளது.

    நாங்கள் உதவுவோம்

    நாங்கள் உதவுவோம்

    கூட்டுறவோடு, செயல்பட்டு, உலக நாடுகள், தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். எனவே நாங்கள் இந்தியாவிற்கு உதவ முன் வந்துள்ளோம். எங்களது அறிவு, தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவியை இந்தியாவிற்கு வழங்க முன் வந்துள்ளோம். எங்களின் உண்மையான தோழன் இந்தியா என்பதால், உதவிக்கரம் நீட்ட இஸ்ரேல் எப்போதும் தயாராக உள்ளது.

    பிரதமர் ஆதரவு

    பிரதமர் ஆதரவு

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு என்னிடம் இந்தியா குறித்து நிறைய கூறியுள்ளார். இந்தியா நமது முக்கியமான கூட்டாளி நாடு. மிக முக்கியமான நண்பன். இந்த உறவு இன்னும் அதிகம் பலப்பட வேண்டும் என்று எங்கள் பிரதமர் கூறுவது வழக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தானுடன் உறவு இல்லை

    பாகிஸ்தானுடன் உறவு இல்லை

    மேலும் ரான் மல்கா கூறுகையில், பாகிஸ்தானுடன் எங்களுக்கு ராஜாங்க ரீதியில் எந்த ஒப்பந்தமும் கிடையாது. எனவே அந்த நாட்டுடன் எந்த ஒரு செயல்பாட்டிலும் இஸ்ரேல் பங்கெடுக்காது. உலகின் நிலையான தன்மைக்கு இந்தியாவின் உதவி மிகவும் அவசியம். உலகை மக்கள் வாழும் சிறந்த இடமாக மாற்ற என்ன தேவையோ அதை நாங்கள் இணைந்து மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    Israel has offered unconditional help to India in defending itself, especially against terrorism, asserting that "there is no limit" to its assistance, an assurance which assumes significance amid demands that the government should consider Israeli-type retaliation to terror strikes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X